எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.11.2018 வெள்ளிக்கிழமை

செயல்படாத அரசு மருத்துமனைகளை கண்டித்து செந்துறையில் அனைத்துக் கட்சிகளின்

சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செந்துறை: காலை 10.00 மணி * இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செந்துறை * கோரிக்கைகள்: 1) செந்துறையில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். அவசர மருத்துவ சிகிச்சைக்கு போதுமான மருந்துகள் இல்லை. அரசு உடனடியாக மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், மருத்துவ ஊழியர் கள் மற்றும் மருந்துகளை உடனடியாக கொடுக்க வேண்டும். 2) செந்துறை ஒன்றியத்தில் உள்ள குமிழியம், இரும்புலிக்குறிச்சி, பொன்பரப்பி, மணக்குடையான், குழுமூர், அங்கனூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் போது மான மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை உடனடியாக நிறப்ப வேண்டும்* இவண்: திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் * ஏற்பாடு: செந்துறை ஒன்றியம், அரியலூர் மாவட்டம்.

3.11.2018 சனிக்கிழமை

முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்

செங்கல்பட்டு: காலை 10.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், ராட்டினகிணறு, செங்கல்பட்டு * சுயமரியாதை சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் முன்னாள் செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் - அ.கோ.கோபால்சாமி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தல் - வீரவணக்கக் கூட்டம் * நிகழ்ச்சி ஏற்பாடு: குடும்பத்தினர் மற்றும் காஞ்சி மாவட்ட திராவிடர் கழகம்

4.11.2018 ஞாயிற்றுக்கிழமை

இல்வாழ்க்கைத் இணையேற்பு விழா

விழுப்புரம்: காலை 7.30 மணி * இடம்: மீனாட்சி ஆறுமுகம் திருமண மஹால், விழுப்புரம் * இணையர்: த.சிலம்பரசன் - அ.சிவசங்கரி * தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைப்பவர்: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்வியல் உரை: க.மு.தாஸ் (மண்டல தலைவர்), இரா.சக்கரை (திமுக நகர செயலாளர், விழுப்புரம்), குழ.செல்வராசு (மண்டல செயலாளர்), வேட்டவலம் பி.பட்டாபிராமன் (மேனாள் மாவட்ட தலைவர்), மருத்துவர் வே.கமலசேகரன் (மாநில கழக பொதுக்குழு உறுப்பினர்), ப.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்), வே.வ.கோபண்ணா (மாவட்டச் செயலாளர்), ம.சுப்பராயன் (கல்லை மாவட்ட கழக தலைவர்), கோ.சா.பாஸ்கர் (கல்லை மாவட்ட கழக செயலாளர்), த.பெரியசாமி (கல்லை மாவட்ட கழக அமைப்பாளர்) * விழைவு: ச.தண்டபாணி, சுமதி தண்டபாணி

5.11.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மை யார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: ந.சந்திரபாபு (பொருளாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * சிறப்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் * தலைப்பு: அமெரிக்கப் பயண அனுபவங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner