Banner

Banner

தற்போதைய செய்திகள்

பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!

பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!

எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம்! சென்னை, மே 22- எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம்.......

22 மே 2013 15:54:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின்

Image - அண்ணன் எல்.ஜி. இலட்சியப் போராளி எல்.ஜி. நூல் வெளியீட்டு விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சமுதாயத்திற்காக இனத்திற்காக, மொழிக்காக பாடுபடக்கூடியவர் அண்ணன் எல்.ஜி.இலட்சியப் போராளி

புதன், 22 மே 2013

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு

Image - சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செ

புதன், 22 மே 2013

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே!

Image - இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே!

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில்

புதன், 22 மே 2013

ராஜபக்சேவின் வாலை நிமிர்த்த முடியாது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்திக் கவும், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை நேரில் அறிந்து கொள்ளவும் இந்தியாவிலிருந்து குழுக்கள் சென்று வந்திருக்கின்றன - அதிகாரிகள் மட்டத்திலும் அத்தகைய குழுக்கள் சென்று வந்ததுண்டு.
இவையெல்லாம் விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்தவையே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன வெறியில் இட்லரைத் தூக்கிச் சாப்பிட்ட வராகத்தான் ராஜபக்சே இருந்து வருகிறார்.

தமிழன் என்று ஒருவன் இருந்தால்தானே - ஓர் இனம் இருந்தால்தானே - உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள் - அந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டால் அப்பொழுது பிரச்சினையே ஏற்படாது அல்லவா! அந்தத் திட்டத்தோடு அமைந்ததுதான் ராஜபக்சேயின் ஒவ்வொரு செயல்பாடும். ஊரையும், உலகத் தையும் ஏமாற்ற அவ்வப்பொழுது கபட நாடகம் ஆடுவார் - அவ்வளவுதான்.

ஜெனிவா - மனித உரிமைக் குழுவின் தீர்மானத்துக்குப் பிறகுதான் ராஜபக்சேவின் பாச்சா பலிக்கவில்லை.

உலக மக்கள் ராஜபக்சேயின் உண்மை முகத்தை அதிகார பூர்வமாகத் தெரிந்து கொண்டு விட்டனார்.

பிரிட்டன் தொலைக்காட்சியின் (பிரிவு - 4) வெளிப்படுத்திய - இன அழிப்புக் கொடூரக் காட்சிகள் உலக மக்களின் மனச்சான்றினைத் தட்டி எழுப்பிவிட்டன.

இன்றைக்கு உலகம் முழுவதும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை (Genocide) ஓரளவு தெரிந்துகொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகள்தான் - அதிலும் பிரிட்டனும், அமெரிக்காவும்தான்.

இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று விளித்தார். அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் கள். இந்நிலையிலிருந்து தடம் புரண்டு ஓரினமே முற்றிலும்  அழிக்கப்படுவதற்குத் துணை போய் விட்டனர். இதன் மூலம் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும்  உன்னத நாடு இந்தியா என் னும் புகழைக் குப்புறப் புரட்டித் தள்ளி விட்டனர்.

உலகை உய்விக்கும் உன்னதக் கொள்கை என்று - முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் மதித்து வந்த - கம்யூனிஸ்டு நாடுகள் தடம் புரண்டு, அந்தத் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன.

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று மீண்டது, அதன் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே - தமிழர் பகுதிகளி லிருந்து இராணுவத்தை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மட்டையடியாகக் கூறிவிட்டார் ராஜபக்சே!

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டார்; வடக்கு- கிழக்கு மாகாண இணைப்புப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

அதனை நீதிமன்றம் வாயிலாக செல்லாது என்று ஆக்கிக் கொண்டு விட்டார்.

13ஆவது திருத்தம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அலையாதீர்கள் என்று அடித்துச் சொல்லி விட்டார்.

இதற்குமேல் என்ன இருக்கிறது? இதற்குப் பிறகு இந்தியாவோ, அய்.நா.வோ என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்பொழுது உலக நாடுகள்முன் செங்குத்தாக எழுந்து நிற்கும் பிரச்சினை.

உலக நாடுகளுக்கே சவால்விட்டு நிற்கிறது இலங்கை சிங்கள அரசு. இப்பொழுது இது ஏதோ ஈழத் தமிழர் பிரச்சினையல்ல; அதையும் தாண்டி உலக நாடுகளைச் சவாலுக்கு இழுக்கும் மனித உரிமைப் பிரச்சினை.

அமெரிக்கா நற்பெயரைத் தட்டிக் கொண்டு போய் விட்டது. நியாயமாக அந்த இடத்தில் இந்தியா இருந்திருக்க வேண்டும்; கோட்டை விட்டு விட்டது; இனியாவது நற்புத்தி வருமா? எங்கே பார்ப்போம்!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

  • காணொளி
  • அறிவுரை
  • நிகழ்ச்சிகள்
  • கார்ட்டூன்
தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக்கொண்டு கரையேற நினைப்பதுபோல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.(விடுதலை, 12.7.1972)
May 2013
S M T W T F S
week 18 1 2 3 4
week 19 5 6 7 8 9 10 11
week 20 12 13 14 15 16 17 18
week 21 19 20 21 22 23 24 25
week 22 26 27 28 29 30 31
  • அறிக்கை
  • மின்சாரம்
  • வாழ்வியல்
  • கருஞ்சட்டை







Banner

வாசகர் கருத்துகள்

  • தமிழ் நாளேடுகள் , வார ஏடுகள் இப்போது அவாள் துதி பா... மேலும்...
  • பக்தி என்றாலே சுய சிந்தனை இழப்பு என்றுதான் போலும்!... மேலும்...
  • வேற்று சாதியில் பெண் எடுப்பதை மனு நீதி சாஸ்திரம் ஏ... மேலும்...
  • அப்படியே ராமர் பாலம் கட்டியதாகவே வைத்துகொள்வோம் தா... மேலும்...
  • தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்வதற்கு நாள் நட்சத்... மேலும்...