
இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா? ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி! சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று.......
23 மே 2013 14:39:02
மேலும்எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு…
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும்…
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க விரைவில் சட்டம்சட்ட…
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9…
தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப்…
மதுவைவிட மோசமானது கிரிக்கெட்(டு)ப் போதை!சூதாட்டம் -…
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில்…
புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர…
பகுத்தறிவாளர், சமூகநீதியாளர் சித்தராமையா கருநாடக முதல்வரானதற்கு…
பலே பலே வீராங்கனை! பால்ய கல்யாணத்தைத்…
கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க…
இலங்கை: காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணி…
இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர்…
மேடையிலிருந்து கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல…
இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி…
ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊதும்…
- மின்சாரம் 2005 ஜூலை 2ஆம் தேதி…
மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு…
ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை திராவிடர்…
மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க…
ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார்…
இராமாயணத்தையும் நளாயினிக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்த…
பக்தியின் பெயரால் மக்கள் கொடுத்த பணத்தையெல்லாம் தாயாருக்கு…
நமது இனம் அழிந்து போய், இனிமேல்…
நீங்கள் என்ன கோத்திரம்? - …
சென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ்.…
ஜாதி மதத்தின் பேரால் கொடுமைகள் -…
பத்திரிக்கை துறையில் இமாலயச் சாதனை படைத்த…
ருசிய தூதர் திறந்து வைக்க; தமிழர்…
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
தகுதி தேர்வில் 60 விழுக்காட்டுக்குக் குறை வாக மதிப்பெண்கள் பெற்று நிருவாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடையாது என்ற விதிமுறையை எதிர்த்து 16 மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தகுதியில்லாத மாணவர்களுக்குப் பொது மக்கள் பணத்தைக் கல்விக் கடனாக வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக இல்லை - அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இல்லை என்பது வெளிப்படை.
தகுதி - மதிப்பெண்ணுக்கும், கடன் உதவிக்கும் என்ன உறவு? கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்குத் தான் கடனே தவிர, சம்பந்தப்பட்ட மாணவன் எத்தனை மதிப்பெண் வாங்கினான் என்பதற்காக அல்ல.
தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவன் இறுதித் தேர்விலும் குறைந்த மதிப்பெண்தான் பெறுவான் என்ற உத்தரவாதம் ஏதாவது உண்டா?
இத்தகைய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, பணியிலும் சேர்ந்து கடனைத் திருப்பித் தரமாட்டார்கள் என்ற முடிவிற்கு வந்ததா நீதிமன்றம்?
அதிக மதிப்பெண்கள் பெற்று அதன் காரண மாகக் கடன்களைப் பெற்றவர்கள்தான் கடனைத் திருப்பிக் கட்டுவார்கள், தகுதி மதிப்பெண்கள் பெறாதவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவ தில்லை என்பதற்கு ஏதாவது புள்ளி விவரங்கள் உண்டா?
முதல் தலைமுறையாகத் தப்பித் தவறி கல்லூரி களில் காலடி எடுத்து வைப்பவர்களிடம் தேவை யில்லாத முட்டுக்கட்டை போட்டால், அம்மக்களின் நிலை என்னாவது?
சமூகநீதிக் கண்ணோட்டத்தில் போராடிப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தால், இன்னொரு வழியில் நுழைந்து அவர்களின் கல்லூரி நுழைவைத் தடுப்பதுபோல் இல்லையா இது?
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கப் போவதில்லை. தலைமுறை தலைமுறையாக படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கிறது.
இதில் பாதிக்கப்படுவது யார் என்றால் முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப் புற ஏழை எளிய மக்களே!
பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள், ஆலை அதிபர்கள் வங்கிகளில் திருப்பிச் செலுத்தக் கூடாது என்ற முடிவிலேயே, கடன் வாங்கும்போதே திட்டமிடுகிறார்கள். கோடிக் கணக்கில் வாராக் கடன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படு கின்றன.
அதேநேரத்தில் கல்வி கற்பதற்காகக் கடன் கேட்கும்போது, மேஷம் ரிஷபம் பார்க்கிறார்கள் என்றால், இதில் நியாயம் இருப்பதாகத் தெரிய வில்லை.
கல்வி வளர்ச்சிக்காக - அதிலும் குறிப்பாக முதல் தலைமுறையாக கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கும் மக்களுக்காக, எந்த எல்லைக்கும் சென்று எல்லா வகையான உதவிகளையும் தந்து, கை தூக்கி விடுவது மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமையல்லவா!
இம்மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்பது தனி மனிதர்களின் வளர்ச்சி என்பதைவிட ஒட்டு மொத்தமான சமுதாயத்தின் - நாட்டின் வளர்ச்சி அல்லவா!
மேலும் இதில் கவனிக்கத்தக்கது - அரசின் பெரும் செலவில் நடத்தப்படும் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படித்த வெற்றி பெறும் உயர்தட்டு மக்கள் இந்தியாவில் இருந்து பணி செய்ய விரும்புவதில்லை.
பட்டம் கிடைத்த கையோடு வானூர்தியில் பறந்து சென்றுவிடுகிறார்கள். உள்நாட்டில் இருந்து கொண்டு கடைசிவரை பணி செய்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களே! இவற்றையும் கவனத்தில் கொண்டு பொருளாதாரத்தில் பாவப்பட்ட மக்களுக்குக் கைகொடுத்துத் தூக்கி விடுங்கள் - இதுதான் சமூகநீதி இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள்! அரசு புதிய கொள்கை முடிவினை எடுக்கட்டும்!