
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்! அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை.......
21 மே 2013 12:50:12
மேலும்கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க விரைவில் சட்டம்சட்ட…
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9…
தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப்…
மதுவைவிட மோசமானது கிரிக்கெட்(டு)ப் போதை!சூதாட்டம் -…
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில்…
புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர…
பகுத்தறிவாளர், சமூகநீதியாளர் சித்தராமையா கருநாடக முதல்வரானதற்கு…
பலே பலே வீராங்கனை! பால்ய கல்யாணத்தைத்…
கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க…
இலங்கை: காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணி…
இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர்…
மேடையிலிருந்து கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல…
இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி…
ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊதும்…
- மின்சாரம் 2005 ஜூலை 2ஆம் தேதி…
மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு…
ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை திராவிடர்…
மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க…
ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார்…
இராமாயணத்தையும் நளாயினிக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்த…
பக்தியின் பெயரால் மக்கள் கொடுத்த பணத்தையெல்லாம் தாயாருக்கு…
நமது இனம் அழிந்து போய், இனிமேல்…
நீங்கள் என்ன கோத்திரம்? - …
சென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ்.…
ஜாதி மதத்தின் பேரால் கொடுமைகள் -…
பத்திரிக்கை துறையில் இமாலயச் சாதனை படைத்த…
ருசிய தூதர் திறந்து வைக்க; தமிழர்…
அய்க்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பி.ஜே.பி.…
தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்!…
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
சென்னை வைஷ்ணவா கல்லூரியில் கடந்த ஜனவரியில் இந்து ஆன்மீகக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடும், மேசைப் புத்தகமும் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தினத்தந்தி அதிபர் டாக்டர் சி.பா. சிவந்தி ஆதித்தன், அப்பல்லோ மருத்துவமனை நிருவாக இயக்குநர் டாக்டர் பிரீத்தாரெட்டி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, போன்றவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
அந்நிகழ்ச்சியின் சூத்திரதாரியான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி (கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்டவர்) ஒரு தகவலை உதிர்த்துள்ளார்.
இந்து அமைப்புகள் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை - என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
அப்படியா? பின் எதற்காக ஆன்மீகக் கண் காட்சியை நடத்திட வேண்டும் - பல லட்சம் மக்கள் பார்த்தார்கள் என்று பூரிக்கவும் வேண்டும்? அதன் பிறகு அந்த கண்காட்சியில் இடம் பெற்றவை களையெல்லாம் உள்ளடக்கிய குறுந்தகட்டினையும் (சி.டி.) மேடையில் புத்தகத்தையும் ஏன் வெளியிட வேண்டும்?
அடுத்து இதுபோன்ற கண்காட்சிகளை கொல்கத்தா, பெங்களூரு, அய்தராபாத் முதலிய இடங்களில் நடத்திட ஏன் திட்டமிடப்பட வேண்டும்?
பொதுவாகவே இந்து அமைப்புகளைச் சேர்ந்த வர்களின் வாய்களில் மருந்துக்கும்கூட உண்மை என்பது தப்பித் தவறியும்கூட வெளிவராது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து மக்களிடம் தவறான தகவல்களை அள்ளி விடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.
ஆர்.எஸ்.எஸ். முகாம்களை அம்பேத்கர் பார்த்துப் பாராட்டினார் என்பார்கள். காந்தியாரும், நேருவும் பார்த்து அசந்து போனார்கள் என்று கயிறு திரிப்பார்கள். பிள்ளையார் பால் குடித்தார் என்று கிளப்பிவிடவில்லையா?
காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் என்ற உண்மை இருக்க, காந்தியாரை சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று கிளப்பி விடவில்லையா? அதன் காரணமாக பல இடங்களில் இந்து - முசுலிம் கலவரங்கள் நடக்கவில்லையா?
இவர்களின் சமூக சேவை என்ன என்று தெரியாதா? குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதுகூட, அரசு உதவிகளை இடையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது போல செயல் பட்ட இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் - பாதிக்கப்பட்ட வர்களில்கூட முஸ்லிம்கள் யார், இந்துக்கள் யார்? என்று பாகுபாடு பிரித்து இந்துக்களுக்கு மட்டும் உதவியவர்கள் ஆயிற்றே!
வெகு தூரம் போக வேண்டாம் - ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறதே! இவ் வளவுக்கும் ஈழத் தீவில் பாதிப்புக்கு ஆளான தமி ழர்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் இந்துக் கள்தானே! அதையும் தாண்டி தமிழர்கள்மீதான வெறுப்பு என்கிற ஆரியக் கொள்கைதானே ஆர்.எஸ்.எஸ்.காரர்களை ஆட்டுவிக்கிறது?
விளம்பரத்தைப் பற்றி வேறு சொல்லிக் கொள் கிறார்கள். சங்கராச்சாரியாருக்கே விளம்பரப் பதாகைகளை (குடநஒ) வைத்துக் கொண்டு திரி கிறார்கள். சென்னை அண்ணாசாலையில் அப்படி வைக்கப்பட்ட ஒரு பதாகையைப் பார்த்து ஆனந்த விகடனே கேலி செய்ததே!
இன்னொன்று முக்கியமானது, சமூக சேவை என்ற பெயரில் இந்து அமைப்புகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன? மக்களிடம் ஏற்றத் தாழ்வு கூடாது, தீண்டாமை கூடாது, தீண்டாமைக்கு ஆணிவேரான ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்களா? அவர்கள் நடத்தும் கண்காட்சியில் இந்தவகையில் மக்கள் மத்தியில் பிளவு நோயை அகற்றி சமத்துவத் தென்றலை உலா வரச் செய்வதற்காக அரங்குகள் வைக்கப்படு கின்றனவா?
மாறாக சிறு சிறு பார்ப்பனச் சிறுவர்கள்கூட அவிட்டுத் திரியுடனும், பஞ்ச கச்ச ஆடையுடனும் தானே காட்சி அளித்தனர். சின்ன வயதிலே விஷ விதைகளை அவர்கள் ரத்தத்தில் ஊன்ற வேண்டுமா? கிருமிகள் பரவுவதும், இந்து அமைப்புகள் பரவுவதும் ஒன்றே - எச்சரிக்கை!