Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இலங்கை, டிச. 14- தேசிய கீதத்தை இனி தமிழ் மொழியில் இசைப் பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக வெளி யான செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித் துள்ளது.

அது தொடர்பாக ஊட கங்களில் வெளிவந் துள்ள செய்தி அடிப் படை ஆதாரமற்றது என்று அந்நாட்டின் திட்ட ஆய்வு மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குநர் லுசியன் ராஜ கவுனே நாயக்கே கூறி யுள்ளார்.

கொழும்பில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் பின் பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்து மட் டுமே விவாதிக்கப்பட்ட தாக இலங்கைப் பொது நிருவாகம் மற்றும் உள் துறை விவகாரத்துறை அமைச்சர் ஜான் சேன விரத்னே தெரிவித்துள் ளார்.

மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள அரசியல் சட்ட உரிமையைப் பறிக் கும் எந்த நடவடிக்கை யையும் எடுக்க மாட் டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தேசிய கீதத்தை தமிழில் இசைப் பது தொடர்பாக இலங்கை அரசிடம் விளக்கம் கேட்கப்பட் டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர் சுரேஷ் பிரேமசந் திரன் கூறியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை அரசு வலியுறுத்தி வரும் நிலை யில், தேசிய கீதம் இசைப் பது குறித்த சர்ச்சையைக் கிளப்புவது தேவையற் றது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்