Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேசுவரம், ஆக. 23- ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது சிங்கள கடற்படையினர் அந்த வழியாக 3 குட்டி படகுகளில் ரோந்து வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த வேலாயுதம், வழிவிட்டான் ஆகியோரின் படகுகளில் ஏறினர். பின்னர் அவர்கள் படகில் இருந்த மீனவர்களை அடித்து உதைத்தனர்.

இங்கு ஏன் மீன் பிடிக்க வந்தீர்கள்? என்று கூறி படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் எறிந்தனர்.

மேலும் படகுகளில் இருந்த பொருள்களையும் கடலில் வீசினர். பின்னர் மீனவர்களை விட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து உடனடியாக கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர் வழிவிட்டான் கண்ணீர் மல்க கூறியதாவது:-

நாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் ஏன் இங்கு மீன் பிடிக்க வந்தீர்கள்? என்று கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். இனிமேல் இங்கு மீன் பிடிக்க வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினர்.

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் கடலில் மீன் பிடிக்க பயமாக உள்ளது. இதனை தடுக்க மத்திய- மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று தாக்கினர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் தாக்குதலால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்