Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20- இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக நிறைவேற்றப்பட்ட டெசோ மாநாட்டின் பல தீர்மானங்களில் எங்களுக்கு உடன்பாடு உண்டு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனின் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவது, அங்குள்ள ராணுவத்தை திரும்ப பெறுவது போன்ற தீர்மானங்களில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுவது கற்பனையான குற்றச்சாட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்