
புதுடெல்லி, ஆக. 9-ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நடப்பு நாடளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பவன்குமார் கூறியதாவது:-
மசோதா தேர்வு கமிட்டி, லோக்பால் மசோதா குறித்த அறிக்கையை செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடக்குமானால் நடப்பு கூட்டத் தொடரிலேயே மேல் சபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.