Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம், ஆக. 8-சென்னை தாம்பரம் படப்பையை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வின்செட் டெய்லர். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகன் ஆகாஷ்.  இவர் தாமதமாக வாய்பேச ஆரம்பித்தான். எனவே அவனை கடந்த மாதம் படப்பையில் உள்ள எவரெஸ்ட் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனர்.

மாணவன் ஆகாஷ் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று பள்ளி வாகனம் பழுதானதால் வேறு ஒரு தனியார் வாகனத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை ஏற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த தனியார் வாகனத்தில் மாணவன் ஆகாஷ் ஏறி மாலை 4.30 மணியளவில் வீடு அருகே வந்து இறங்கினான். அவன் கீழே இறங்கியதை கவனிக்காமல் டிரைவர் வாகனத்தை எடுத்தார். இதில் வாகனத்தின் சக்கரத்தில் ஆகாஷ் கால் சிக்கியது. அவன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டான்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டனர். இதனால் வாகனம் நிறுத்தப்பட்டது. இதில் மாணவனின் கால் சிதைந்தது. உடனே ஆகாசை அந்த வாகனத்தில் ஏற்றி படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் 8 தையல் போடப்பட்டது.

பின்னர் மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்றதும் மாணவனின் உடல் நிலை மோசமானது. உடனே அவனை மீண்டும் படப்பை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் ஆகாஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவனின் உடல் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  மணிமங்கலம் காவலர்கள் ர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்