Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.5- தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சரிவர பெய்யாததால் தமிழ்நாட்டுக்கு போதிய மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடமேற்கு வங்க கடலில் ஒடிசா மாநிலத்துக்கும், ஆந்திராவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்று வானிலை மய்யம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மய்யம் அறிவித்துள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டாலும் கனமழை எங்கும் பெய்யவில்லை. சாரல் மழைதான் பெய்தது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்