
ராமேசுவரம், ஆக. 1- ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்வளம் மிகுந்த கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது அங்கு 5 போர் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
பின்னர் அவர்கள் மீனவர்களின் படகுகள் மீது காலி மதுபான பாட்டில்கள், இரும்பு துண்டுகள், கற்களை வீசி விரட்டியடித்தனர். மீனவர்கள் படகுகளில் பதுக்கி கொண்டதால் காயம் ஏதும் இல்லாமல் தப்பினர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருவதால் ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.