Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுவை, ஜூலை 30- மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையொப்பமிட்டுள்ளார்.

தமிழக மற்றும் புதுவை மாநில அரசுகளுக்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மவுலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழம்பியுள்ளனர்.

விடுதலைப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமானவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். அவரின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் தேதியை தேசிய கல்வி நாளாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் இந்நாளை கல்வி உரிமை நாளாகக் கொண்டாடுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தனது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அனுப்பினார்.

அந்தக் கடிதம் அந்தந்த மாநிலத்தின் மொழியில் இருந்தது. தமிழகம் மற்றும் புதுவைக்கு தமிழில் எழுதி அனுப்பப்பட்டிருந்த கடிததத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதுவை அரசு அந்தக் கடிதத்தின் நகல்களை அரசுத் துறைகள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது.

அந்தக் கடிதத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என்பதற்கு பதிலாக மவுலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த மாணவர்கள் எங்களின் பாடப்புத்தகங்களில் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என்று உள்ளதே. இந்தக் கடிதத்தில் பிரதமர் மவுலானா அப்துல் கலாம் ஆசாத் என்று குறிப்பிட்டுள்ளாரே.

அப்படி என்றால் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் தான் யார் என்று ஆசிரியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்