Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லூர், ஜூலை 30-  டில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.  இவ்விபத்தில் 50 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4.30 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11 ஆவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு உடனே சென்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சிறீதர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிகிறது.

மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும் என்று தெரிகிறது.

தூங்கும் வசதி கெண்ட இந்த 2 ஆம் வகுப்பு பெட்டியிலிருந்து இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீப்பிடித்த பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்தாக தெரிகிறது.

தகவல் அறிய வசதி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

044- 25357398, 044-25357398, 2345865866, 044-25330825 என்ற எண்களில் தெடர்பு கொண்டு தகவலை அறியலாம்.

நெல்லூரில் தகவல் அறிய - 08612575038 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அய்ந்து லட்சம் ரூபாய் நிதியுதவி

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் அய்ந்து லட்சமும்,

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும்,

சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே நிருவாகம் அறிவித்துள்ளது.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்