Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 6- காவல்துறையினரால் தாக்கப்பட்ட கைதிக்கு சிகிச்சை தரவும், ரிமாண்ட் செய்யும் நீதிபதிகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் விவரம் வருமாறு:

சோழவரத்தைச் சேர்ந்த பாரதி என்பவரின் மகன் அருண். இவரை  திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் சோழவரம் காவல்துறையினர்.

ஜூன் 16 ஆம் தேதி அருணை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.

அருண் குறித்து தகவல் தெரியாததால், தாய் பாரதி காவல்துறை அய்.ஜி.க்கு 19 ஆம் தேதி புகார் கடிதம் கொடுத்துள்ளார்.

20 ஆம் பொன்னேரி நீதிமன்றத்தில் அருணை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.

இதுகுறித்து அருணின் தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, காவல்துறையினரால் தாக்கப்பட்ட கைதி சந்துருக்கு மருத்துவ சிகிச்சை தர உத்தரவிட்டார்.

சிகிச்சை குறித்த அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அவர்,

ரிமாண்ட் உத்தரவிடும்போது நீதிபதிகள் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுவதாகவும், எந்திரத்தனமாக செயல்படுவதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கண்டனம் தெரிவித்தார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்