Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 6- பரந்து விரிந்த மெரினா கடற்கரை உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இந்த கடற்கரையில் ஏராளமான கடைகளை அமைத்தும், குப்பைகளை கொட்டியும் இயற்கை சீரழிக்கப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தி கடற்கரையை முறைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே மணல் பரப்பில் இருந்த கடைகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 1200 கடைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

கடற்கரையில் குறிப்பிட்ட பகுதிகளை தேர்வு செய்து அங்கு டென்சில் தகடு அல்லது துத்தநாக தகடு மூலம் சிறிய அளவிலான கடைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்கு வசதியாக கடைகள் வைத்திருப்பவர்கள் கட்டமைப்புகளை மாற்றி விட்டு தள்ளு வண்டி கடைகளை ஜூலை 5 ஆம் தேதிக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. நேற்றுடன் கெடு காலம் முடிந்தது.

ஆனால் யாரும் கடைகளை நடமாடும் கடைகளாக மாற்றவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மாநகராட்சி தயாராகி வருகிறது.

து பற்றிய மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

மெரினாவில் கடைகளை முறைப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

அதற்காகத்தான் நடமாடும் வகையில் கடைகளை மாற்ற அறிவிப்பு செய்தோம். குறித்த நாட்களில் வியாபாரிகள் கடைகளை மாற்றம் செய்யாததால் காவல்துறை உதவியுடன் சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

- இவ்வாறு அவர் கூறினார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்