Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, ஜூலை 2- துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 10 ஆம் தேதி முடிகிறது.

இதனால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்று முடிவு செய்ய இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்தல் அதிகாரி பிரம்மா மற்றும் துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

அடுத்த மாதம் 2 ஆம் தேதி தேர்தலை நடத்த ஆலோசித்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு  நாள்களில் வெளியாக உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற செயலக செக்கரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவை எம்பிக்கள் வாக்களித்து துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். மேலவையான மாநிலங்களவையில் 233 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இரு அவைகளிலும் மொத்தம் 776 எம்.பி.க்கள் உள்ளனர்.

12 எம்.பி.க்கள் நியமன எம்பிக்கள் ஆவார்கள். இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை உள்ளது. எனவே துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 788 எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்