Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

புதுச்சேரி, ஜூலை.1- கிராமப்புற சுகாதார இயக்கம்போல் நகர்ப் புற சுகாதார இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப் படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித் தார். புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் (தன்னாட்சி) 3-ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் ரூ.342 கோடி செலவில் புதியதாக கட் டப்பட்டுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை திறப்பு விழா, ஜிப்மர் ஆடிட் டோரியத்தில் நேற்று நடந்தது.  விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு 311 பேருக்கு மருத்துவப் பட்டங் களை வழங்கினார். மேலும் அவர் ரிமோட் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையினை திறந்து வைத்து பேசியதாவது:-

இப்போது நாம் சுகா தாரத்தை பேணிக்காக்க கடுமையான சவால் களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பிர சவத்தின்போது தாய் சேய் இறப்பு, நம்மை கவலை கொள்ளத் தக்க வகையில் இருந்தது. பல ஆண்டுகளாக சுகா தாரத்துக்காக மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்களே தங்கள் சொந்த பணத்திலிருந்து செலவிடுகின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கிராமப்புற சுகா தார இயக்கம் தொடங் கப்பட்டது. இதன் கார ணமாக பொதுமக்க ளின் சுகாதார நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது. பிரசவத்தின்போது, தாய் - சேய் இறப்பு குறைந் துள்ளது. பெரும்பா லான பிரசவங்கள் மருத் துவமனைகளிலேயே நிகழ்கின்றன. பொது மக்கள் தங்கள் மருத் துவச் செலவினங்களை குறைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தினை மேலும் 5 ஆண்டுகள் தொடர உள்ளோம். அதுமட்டுமில்லாமல் நகர்ப்புறங்களில் வாழ்ப வர்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க நகர்ப்புற சுகாதார இயக்கம் என்ற புதிய இயக்கத்தையும் தொடங்க உள்ளோம். டாக்டர்கள், செவிலி யர்கள், சுகாதார ஊழி யர்கள் என அனைவரும் மக்கள் அனைவருக்கும் நல்ல சுகாதார சேவையை வழங்க வேண்டும். மத்திய அரசு மருத் துவக்கல்வியை மேம் படுத்த பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவ படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள் ளன. மருத்துவக் கவுன் சிலின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் பல புதிய மருத்துவக் கல் லூரிகள் திறக்கப்பட் டுள்ளன.
பிரதமரின் சுவஸ்திய சுரக்ஷா யோஜானா திட்டத்தின்கீழ் எய்ம்ஸ் நிறுவனத்தைப்போல் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் புதிய மருத்துவக் கல் லூரிகள் மற்றும் மருத் துவமனைகள் கட்டப் பட்டு வருகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-2013-ஆம் ஆண்டிலும், மருத்துவமனைகள் 2013-2014-ஆம் ஆண்டிலும் செயல்பட தொடங்கும்.

புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி மய்யமாகத் திகழ தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மத்திய சுற்றுலா அமைச் சகத்துடன் சேர்ந்து சுற் றுச் சூழலை பாதிக்காத வகையில் சுற்றுலாவை மேம்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்