Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, ஜூன் 24- குடியரசுத் தலைவர் தேர் தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 26ஆம் தேதி தனது பத வியை பதவி விலகல் செய்கிறார்.

ஆளும் அய்மு கூட் டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அய்மு கூட்டணி 1 ஆட்சியில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அய்மு கூட்டணி 2ஆவது ஆட்சி 2009ல் அமைந்தபோது நிதிய மைச்சராக பதவியேற் றார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டதை தொடர்ந்து, பிரணாப்புக்கு ஆதரவு குவிந்து வருகிறது. தற் போதுள்ள சூழ்நிலை யில், மொத்தமுள்ள 10 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகளில் 6.38 லட்சம் வாக்குகளை பெற்று பிர ணாப் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்த வாக்கு எண் ணிக்கையை மேலும் அதிகமாக்குவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திரட்ட பிர ணாப் முயற்சி மேற் கொண்டுள்ளார்.  இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மிரிதிக்கு   நேற்று  சென் றார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், நிதியமைச்சராக கொல் கத்தாவுக்கு நான் வரு வது இதுவே கடைசி. குடியரசுத் தலைவர் தேர் தலில் போட்டியிடுவதற் காக எனது பதவியை பதவி விலகல் செய்ய உள்ளேன். அதன் பிறகு, அரசு பற்றியோ அல்லது கட்சி விவகாரம் பற்றியோ என்னால் பேச முடியாது. அய்மு கூட் டணியில் ஒரு கட்சியை (திரிணாமுல் காங்கிரஸ்) தவிர, மற்ற எல்லா கட்சிகளும் எனக்கு ஆத ரவு தெரிவித்துள்ளன. அய்மு கூட்டணியில் இல்லாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார் வர்டு பிளாக், அய்க்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகியவையும் ஆதரவு அளித்துள்ளன. இதுவரை முடிவு எடுக் காமல் இருப்பவர்கள், என்னை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுக் கிறேன். மிகுந்த மகிழ்ச்சி யுடன் எனது சொந்த ஊருக்கு செல்கிறேன். பிர்பும் கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். அடிப் படையில், நான் கிரா மத்து சிறுவன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், எனது கிராமத்து வீட்டுக்கு செல்வேன் என்றார்.

மிரிதிக்கு சென்ற பிறகு அவர் அளித்த பேட்டியில், நிதியமைச் சர் பதவியை 26ஆம் தேதி பதவி விலகல் செய்ய உள்ளேன்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்