Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி கலைஞர் கருத்துரை

சென்னை, ஜூன் 17- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதே சரி, அதனை மாற்றியது தமிழ் விரோத பார்ப்பனீய செயலே! என்று மலே சியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் அறிக்கையை சுட்டிக் காட்டி கலை ஞர் கருத்துரை வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக் கையில் கூறியிருப்ப தாவது:

கேள்வி:-  தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது சட்டம் செய் ததை, அ.தி.மு.க. ஆட்சி யில் மாற்றிய போதிலும்,  மலேசியத் தமிழ் இலக் கிய கழகம் போன்றவை அ.தி.மு.க. ஆட்சியினரின் செயலை  தமிழர் விரோ தச் செயல் என்ற அறி வித்திருப்பது வரவேற் கத் தக்க ஒன்று அல் லவா?

கலைஞர்:-  மலேசி யத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், அதன் செய்தித் தொடர் பாளர் ந. பொன்னுசாமி அவர்கள் விடுத்த அறிக் கையில்,தமிழ்ப் புத்தாண்டு குறித்து பல காலக் கட்டங்களில் பல்வேறு அறிஞர் பெருமக்கள்  கோரிக்கை விடுத்தும்,  ஆட்சியிலும்  ஆலயங் களிலும் பார்ப்பனிய ஆதிக்கமே மேலோங்கி யிருந்த காரணத்தால்,  அறிஞர் பெருமக்களின் கோரிக்கைக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.   இத்தகைய சூழ்நிலை யில், தமிழிய சிந்தனை யாளரும், தமிழ் இலக் கியக் கழகத் தலைவரு மான நினைவில் வாழும் மு. மணிவெள்ளைய னார் தலைமையில், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம்  உள் ளிட்ட தமிழ் சார்ந்த இயக்கங்களின் துணை யுடன் 2001லும், 2008லும்  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு  என்ற பரிந் துரை மாநாடுகள் மலே சியாவில் நடத்தப் பட்டன.   தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற மலேசியத் தமிழ் இயக் கங்களின் பரிந்துரை மாநாடுகளின் தீர்மானங் களை  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் அனுப்பிவைத்தது.   தமிழ்ப் புத்தாண்டு குறித்து தமிழ் அறிஞர் களின் ஆய்வுகளையும், மலேசிய இயக்கங்களின் அறிவு பூர்வமான கோரிக் கைகளையும்  சீர்தூக் கிப் பார்த்து தலைவர் கலைஞர் 2008ஆம் ஆண்டில் தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு  என்று  தமிழக அரசினால் அறிவிப்பு செய்து, உலகத் தமிழர் உள்ளங்களில் பால் வார்த்து பேருவகை கொள்ளச் செய்தார்.

ஆனால் தமிழகத்தின் இப்போதைய பார்ப் பனிய முதல்வரான ஜெயலலிதா, வெப்பம் தாங்காமல் தாவரங்கள் மாண்டு மடியும் சித்தி ரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண் டாக அறிவித்து  தமிழர் விரோதச் செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளார்.

22-2-2012இல் கோலாலம்பூர் கே.ஆர். சோமா அரங்கில் மலே சிய இலக்கியக் கழகத் தலைவர் அ. இராமன் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் தமிழ்க் காப்பகம்,  மலேசிய சைவத் தமிழ்க் காப்பகம்,  மலேசிய சைவ நற்பணிக் கழகம் உள்ளிட்ட மலேசியா வில் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களுடன் இணைந்து, தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு  என்ற பரிந் துரை மாநாட்டினை மீண்டும் நடத்திட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக் கிறார்கள் என்று தெரி வித்துள்ளார்.

தி.மு. கழக ஆட்சியில்  தன்னிச்சையாக இந்த முடிவினை நான் எடுத்தேன் என்று  இன் றைய ஆட்சியாளர்கள் பரப்பி வருகின்ற செய் திக்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் எடுத் துள்ள இந்த முடிவே தக்க பதிலாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்