Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், ஜூன் 16- ஆந்திர இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அலை வீசியதால் காங்கிரஸ் சுருட்டி வீசப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் கிரண்குமார் ரெட்டி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அரசுக்கு எதிராக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து 16 பேர் எம்எ.ல்.ஏ. பதவி ரத்து செய்யப்பட்டது.

மேலும் நடிகர் சிரஞ்சீவி எம்.பி.யானதால் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான தொகுதிகள் உள்பட மொத்தம் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இது 'மினி' பொதுத் தேர்தல் போல் கருதப்பட்டது. காலியாக இருந்த நெல்லூர் எம்.பி. தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு அலை கடலென கூட்டம் திரண்டது. அவருக்கு ஆதரவாக அலை வீசியது. இதைத் தடுக்க காங்கிரஸ் திட்டமிட்டது.

ஜெகன்மோகனை பழி வாங்க அவர் மீது ஏற்கெனவே சி.பி.அய். சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து இருந்தது. அந்த வழக்கை சி.பி.அய்.மீண்டும் தீவிரப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. இது  அனுதாப அலையாக மாறியது.

ஆதரவு அலையும், அனுதாப அலையும் ஒன்று சேர்ந்து புயலாக மாறி இடைத்தேர்தலில் காங்கிரசை சுருட்டி வீசியது.

தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை ஜெகன்மோகன் கட்சி கைப்பற்றியது. சிரஞ்சீவி வெற்றி பெற்ற திருப்பதி தொகுதியிலும் ஜெகன் மோகன் கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் 13 தொகுதிகளை இழந்து 2 தொகுதியை மட்டுமே தக்க வைத்தது.

மேலும் ஒரு தொகுதியை டி.ஆர்.எஸ். கட்சியிடம் இழந்தது. சிரஞ்சீவி தன் வசம் இருந்த ஒரு தொகுதியையும் ஜெகன் மோகனிடம் இழந்தார்.

ஜெகன்மோகனின் இந்த வெற்றிக்கு ஒய்.எஸ்.ஆர். செயல்படுத்திய ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்தான் காரணம் என்று ஆந்திர அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்