
எண்ணூர், மே 4- அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் மேதின வாயிற் கூட்டம் தமிழர் தலைவர் அவர்களின் சிறப்புரை யுடன் இனிதே நடந்தது.
ந.மதிவாணன் வரவேற்புரையாற்றினார். திருவொற்றியூர் பெ.செல்வராசு தலைமை ஏற்று நடத்தித் தந்தார். மண்டலச் செயலாளர் நெய்வேலி ஞானசேகரன் உரையாற்றினார். அசோக் லேலண்டில் இருக்கும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்தனர். அசோக் லேலண்டு தொ.மு.ச பேரவை சார்பில் அவ்வமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நலமன்றம் சார்பில் நடைமுறைத் தலைவர் வாசன், மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை சார்பில் விஜயகுமார், டாக்டர் அம் பேத்கர் பேரவை சார்பில் முருகேசன் சாந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர் முன்னேற்ற அணி சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கே.ஆர். எஸ்.கருப் பையா, மதனகோபால் ஆகியோர், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் அய்.பன்னீர் செல்வம் மற்றும் பிடிஅய் தொழிலாளர்கள் சார்பில் மனோகரன் ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
புத்தக வெளியீடு
தமிழர் தலைவர் வெளியிட்ட மேதினமும் தொழிலாளர் இயக்கமும் என்ற தந்தை பெரியார் எழுதிய புத்தகத்தை தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். தொமுச பேரவையின் தங்கராஜ், தொமுச பேரவையின் தலைவர் குமார், செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் பழனிவேல், அசோக் லேலண்டு கருவியாக்கும் பகுதி செயற்குழு உறுப்பினர் மனோகரன், அனல் சிகிச்சைப் பிரிவு செயற்குழு உறுப்பினர் அன்பு, பல்லவர் பேரவையின் தலைவர் அய்.பன்னீர் செல்வம், தொழிலாளர் நல மன்றத்தின் சார்பில் நடைமுறைத் தலைவர் வாசன், நிருவாகிகள் செந்தில்குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர், மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை சார்பில் செயலாளர் விஜயகுமார், நிர்வாகி ஜெயச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பத்து புத்தகங்கள் கொண்ட தொகுப்பை வாங்கினார்கள். சிங்கார வேலர் பேரவையின் ரகுபால், மொத்தமாக அய்ந்து புத்தகங்கள் வாங்கினார். முன்னதாக நேரந்தவறாமைக்கு இலக்கணமான நமது தமிழர் தலைவர் அவர்கள் கூட்டம் ஆரம்பிக்க இருந்த நேரத்திற்கு சரியாக வந்து விட்டார்.
சிலைக்கு மாலை
அசோக் லெலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் தலைவர் பெ.செல்வராசு அவர்களும், செயலாளர் க.தமிழினியன் அவர் களும், அன்னை சிவகாமிநகர் திராவிடர் கழக தோழர் மோகன் ஆகியோர் மற்றும் கழகத் தோழர்கள் புடைசூழ, அறிஞர் அண்ணா, டாக்டர் அண்ணல் அம்பேத்கர் மற்றும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து வாழ்க என ஒலிமுழக்கமிட்டனர்.

தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் பேசும் போது, தொழிற்சங்கம் என்பதும் தொழிலாளர் இயக்கங்களும் வெறும் சம்பள உயர்வை மட்டும் நோக்கமாக கொண்டு இயங்காமல் குடும்பம், படிப்பு, சமுதாயநிலை ஆகியவை உயரவும் பாடுபட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்துகளை எடுத்து கூறினார். தொழிலாளி - முதலாளி என்பவர்கள் ஆண்டான் - அடிமை மனோபாவத்தை விட்டு தொழிலாளிகள் தொழிலின் பங்காளிகள் ஆக்கப் பட வேண்டும் என்ற அய்யா பெரியாரின் கருத்தை யும் வலியுறுத்தினார்.
பல வருடங்களுக்கு முன்பே அய்யா அவர்கள் அவ்வாறு சொன்னதோடு மட்டுமல்ல, தன்னுடைய மண்டியில் வேலைசெய்த மற்ற மூவரையும் அவ் வாறே பங்காளிகள் ஆக்கி லாபத்தில் பங்கையும் வழங்கினார் என்பதை எடுத்துச் சொன்னார்.
நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் மற்றவர்கள் செய்யாமல் விட்டதை நாம் செய் வோம். மற்றவர்களால் முடியாதது நம்மால் முடியும் என்றார். இந்த விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் சிந்தனை சிதறல்கள் தட்டிகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், மாவட்டச் செயலாளர் கி.இராமலிங்கம், நீலாங் கரை வீரபத்திரன், நடராசன், வி.எஸ்.பாண்டியன், மனோகரன், தமிழ்நாடு அச்சகம் ராஜேந்திரன், கணேசன், அறிவழகன், மடிப்பாக்கம் ஜெயராமன், ஆவடி பா.தென்னரசு, ஜீவா, வெற்றிவீரன், பெரு. இளங்கோ, அசோக் லேலண்ட் ஊழியர்களும், கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். உரிய நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் நிறைவடைந்தது. தமிழர் தலைவர் 30 நிமிட பேச்சு அனைவரையும் சிந்திக்க வைத்தது குறிப் பிடத்தக்கது.

எண்ணூரில் விரைவில் திறக்கப்பட இருக்கும் தந்தை பெரியார் சிலையை பார்ப்பதற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரவர்மன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (எண்ணூர், 3.5.2012)