எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 22 தார்மிகம்பற்றியும், அற நெறி பற்றியும் கொட்டி கொட்டி அளக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 விழுக் காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2 ஆவது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்ட ணிகள் உருவாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4, தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடு தலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறி விக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் பாஜக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று (21.3.2019) நாடு முழுவதும் போட்டியிடவுள்ள 184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டி யலை பாஜக வெளியிட்டது.

அதில் 78 பேர் கடந்த மக்களவை தேர்த லில் போட்டியிட்டவர்கள். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 19% பேர், அதாவது 35 பேரின் மீது குற்ற வழக்குகள் உள்ளன. புதிதாக 106 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் குற்றப்பின்னணி குறித்து தெரிவித்தால், மேற்கூறிய எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ள பாஜக வேட்பாளர்களில் 11 வழக்குகளுடன் சந்திரபூர் தொகுதி வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் ஒடிசாவில் பாலசோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி 10 வழக்குகளுடனும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 5 வழக்குகளுடனும் பட்டியலில் இருக்கின்றனர். இதன்மூலம் இந்திய அரசி யலையும், குற்றப் பின்னணியையும் பிரிக்க முடியாது என்பது தெளிவாகிறது.

கிரிமினல் வழக்குகளில் 58 விழுக்காட்டினர் பி.ஜே.பி.யினரே!

2015 ஆம் ஆண்டிலிருந்து குற்றம் இல்லாதார், ஊழல் செய்யாதார் மட்டுமே அரசியலில் இருப்பார்கள் என்று 2014 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நரேந்திர மோடி முழங்கினார் அல்லவா!

இப்பொழுது நாடெங்கும் உள்ள 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள், 720 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிரிமினல் குற்ற வழக்குக்கு ஆளானவர்களில் 58 விழுக் காட்டினர்  பி.ஜே.பி.யினர்தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner