எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? -ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

பொருளாதார வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? -யஷ்வந்த் சின்கா

இந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன? -பிரியங்கா காந்தி

புதுடில்லி, மார்ச் 20 மோடியின் அய்ந் தாண்டு -ஆட்சி குறித்து சரமாரியான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும், காங்கிரஸ்மூத்ததலைவருமானஅசோக் கெலாட், ஒரு தனியார் செய்தி நிறுவ னத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் நாடும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. ஆட்சியைகைப்பற்றுவதற்காக, அவர் எதையும்செய்வார்.பாகிஸ்தானு டன்போருக்கும் செல்வார் என்று மக்கள் கருதுகி றார்கள்.

மோடி நல்ல நடிகர். அவர் பாலி வுட்டில் நுழைந்திருந்தால், தனது முத்தி ரையை பதித்து இருப்பார். பொய் வாக்குறுதிகளை வணிகம் செய்வதில் மோடி கில்லாடி.

மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் இனிமேல் தேர்தல் நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. சீனா, ரஷ்யா ஆகியவற்றின் வழியில்தான் இந்தியா செயல்படும். அந்த நாடுகளின் பாணியில் தேர்தல் நடத்தப்படும். ஒரே கட்சிதான் ஆளும். யார் அதிபர், யார் பிரதமர் என்பது தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிடும்.

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரு வதற்காக, இந்தியத் தூதரகங்களை துஷ் பிரயோகம்' செய்கிறார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்கான சந்திப்புகளை இந்திய தூதரகங்கள் நடத்துகின்றன.

ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை வேண்டும். பாரதீய ஜனதா தலை வர்களுக்கு சகிப்புத்தன்மையே கிடை யாது. எதிர்த்தரப்பினர் தங்களை கேள் வியே கேட்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் மர பணுவிலேயே சகிப்புத்தன்மை கிடை யாது.

எங்கள்பக்கம்தான்உண்மைஇருக் கிறது.எப்போதும்உண்மையே வெல்லும்.மக்கள்புத்திசாலிகள்என்ப தால், உண்மையையும், பொய்மையை யும் வேறுபடுத்திப் பார்ப்பார்கள்.

விசாரணை அமைப்புகளை பயன் படுத்தி, மோடி எதிர்க்கட்சிகளை குறி வைக்கிறார். அவரிடம் சாதனை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். அவர் பேசும் வார்த்தைகள், பிரதமர் பதவிக்கு உகந்ததாக இல்லை.

பாரதீய ஜனதாவின் தாய் அமைப் பான ஆர்.எஸ்.எஸ்., அரசியல் சட் டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மய்யமாக செயல்படுகிறது. ஒவ்வொரு அமைப்பிலும் தனது ஆட்களை திணிக்க முயற் சிக்கிறது.

இவ்வாறு அசோக் கெலாட் கூறி னார்.

யஷ்வந்த் சின்கா சாட்டையடி!

ரிசர்வ் வங்கி, சி.பி.அய்., என பல அமைப்புகள் எப்படி சிதைக்கப் பட்டுள்ளன! மோடியின் தவறுகளை பார்ப்பதற்கு, பூதக்கண்ணாடி தேவை யில்லை!

இந்த அமைப்புகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டதால், அதிகாரம், பிரதமர் என்ற தனிநபரின் கையில் சென்றுள்ளது. பிரதமர் அலுவலகம் என்றஓர் அமைப்பு மட்டுமே, நாட்டை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. மற்ற அமைப்புகள் எல்லாம் தரம் குறைக்கப் பட்டுவிட்டன.

மோடி மீண்டும் பிரதமரானால் என்ன நடக்கும்?

அவரை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தால், கடைசியாக உள்ள, தேர்தல் என்ற ஜனநாயக அமைப்பும் முழுமையாகஅழிக்கப்பட்டுவிடும். வரும் தேர்தலில் நாட்டு மக்களுக்கு முன் உள்ள முக்கிய பிரச்னை, ஜனநாயகத்தைசேதத்தில் இருந்து காப்பாற்றி, பாதுகாக்க வேண்டும்.

மோடிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா?

கடந்த, அய்ந்து ஆண்டுகளில், இந்தியப் பொருளாரத்துக்கு, மிகப் பெரிய அளவிலான பாதிப்பை மோடி அரசுஏற்படுத்தி விட்டது.

பொருளாதார பிரச்சினைகளால், வளர்ச்சி குறைந்து, வேலைவாய்ப்பு இல்லாதது அதிகரித்து விட்டது. செல்லாத ரூபாய் நோட்டு அறி விப்பு, பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, நல்லது செய்வதை விட, பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயக அமைப்புகள்சீர்குலைவு, மோசமான பொருளாதார கொள்கையைத் தவிர, நீங்கள் எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள்உள்ளனவா?

வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டின் பாதுகாப்பில் வெற்றி பெற் றுள்ளதாக, இந்த அரசு கூறுகிறது. ஆனால், இந்த இரண்டில் தான், மிகப் பெரிய தோல்வியை இந்த அரசு சந்தித்து உள்ளது. பல நாட்டுத் தலைவர்களை சந் தித்தது, கட்டிப் பிடித்தது போன் றவை மட்டுமே நடந்து உள்ளன. ஆனால், இவற்றால், நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே.

பயங்கரவாத தடுப்பு நடவடிக் கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

எல்லையில் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'சர்ஜிக்கல்ஸ்டிரைக்' எனப்படும் துல் லிய தாக்குதல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியதை, வெற்றியாக கூறிக் கொள் கின்றனர். ஆனால், நாட்டின் பாது காப்பு, கேள்விக்குறியாகவே உள்ளது.

பா.ஜ.க. குறித்து உங்கள் கருத்து என்ன?

பா.ஜ.க. தற்போது, ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஜன நாயகம் இல்லை. அங்கு எல்லோரும் பயப்படுகின்றனர். அல்லது மோடியால் மட்டுமே தேர்தலில் வெற்றியைப் பெற முடியும் என்று நினைக்கலாம். அதனால், எந்த எதிர்ப்பையும் தெரி விக்க முடியாமல், வாய்மூடி மவுனி களாக உள்ளனர்.

பிரியங்கா காந்தியின் கணை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகுமூலம் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கிழக்கு மாநில பொதுச்செயலாளரான பிரி யங்கா காந்தி,  செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் 70 ஆண்டுகளாகச் செய்தது என்ன என்ற வாதம் காலாவதியாகி விட்டதாகக் குறிப்பிட்டார். கடந்த அய்ந்து ஆண்டுகளில் செய்தது என்ன என்று பாஜக பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேசத்தில் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு நன்றாகதான் உள்ளது. ஆனால் உண்மை நிலைமை அப்படி இல்லை என்று சாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மக்களை சந்திப்பதாகக் கூறிய பிரியங்கா, மக்கள் அனைவரும் இடர் பாட்டில் சிக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மோடி அரசின் முன் எந்த ஒரு விஷயத்தையும், பிரச்சினையையும் எழுப்பி னால் நாம் தேசவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக சாடினார். இந்த தேசமும், ஜனநாயகமும் அனைவருக்குமானது என் பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner