எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க. தலைமையிலான கூட்டணி - கொள்கைப்பூர்வமான கூட்டணி! உரிமை காக்கும் கூட்டணி!!

பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி சமுகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரானது

தமிழ்நாட்டை அடகு வைத்த - பா.ஜ.க.வுக்கு துணை நிற்கும்

அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோற்கடிப்பீர்!

நடக்கவிருக்கும் 18 ஆம் மக்களவைத் தேர்தல் சமுகநீதி - மதச்சார்பின்மை என்ற அணிக்கும், இதற்கு விரோதமாக இருக்கும் அணிக்கும் இடையே நடைபெறும் முக்கிய தேர்தல். எதற்கும் விலை போகாமல்  - தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை  வருமாறு:

இந்தியத் துணைக் கண்டத்தில் 18 ஆம் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 இல் தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் முக்கியமான முழக்கங்கள் மக்கள் முன் வைக்கப்படும் முற்போக்கு அணியினரால்.

இரு முரண்பட்ட அணிகள்

மதச்சார்பற்ற அணி - மதச் சார்பு அணி,

சமுகநீதி அணி - சமுகநீதிக்கு எதிரான அணி

என்ற முழக்கங்கள் இதற்குமுன் ஒலித்தன.

இப்போதோ சமுகநீதி - மதச்சார்பின்மை காப்பு என்ற ஓரணி - இவற்றுக்கு எதிராக இன்னொரு அணி என்ற நிலை

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக...

குடியரசு நாளையொட்டி மத்திய அரசு கொடுக் கும் விளம்பரத்தில்கூட தனது இந்து மதவாதக் கண் ணோட்டத்தோடு நடந்துகொண்டுள்ளது - மோடி தலைமையிலான பி.ஜே.பி.  அரசு.

‘‘We, The People of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Socialist, Secular, Democratic, Republic and to secure to all its citizens.....!''

என்பதில் உள்ள Secular என்ற சொல்லை இருட் டடித்து அரசு விளம்பரமாக வெளியிட்டது என்றால், இந்த விபரீ தத்தை என்னவென்று சொல்ல!

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், (Preamble) கூறப்படும் முக்கியமான சொல்லான மதச்சார்பின்மை என்ற சொல்லையே தூக்கி எறியக் கூடிய அளவுக்கு மதவாதக்கூட்டத்தின்கையில்இன்றையதினம்அரசு சிக்கியிருக்கிறது-தப்பித்தவறிமீண்டும்இவர்கள்ஆட்சி யில் அமர்ந்தால், அவர்களின் ஆர்.எஸ்.எஸ். அஜெண் டாவான இந்து ராஜ்ஜியத்தை வெளிப்படையாக அறி வித்து, செயல்படமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?

அதுபோலவே, அதே அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள,

Justice, Social, Economic and Political என்பதில் உள்ள Social Justice என்னும் சமுகநீதியையும் ஒழிக்கும் ஒரு வேலையில் பல தந்திரங்களைக் கையாளுகிறது. 10% இட ஒதுக்கீடு உள்பட.

இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலாம்!

அதில் ஒன்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலைத் திணித்து, உயர்ஜாதி ஏழையினருக்கு இட ஒதுக்கீடு என்னும் ஒட்டகத்தை - சமுகநீதிக் கூடாரத்தில் நுழைய விடுகிறது.

தேசியக் கல்வி என்றும் - ‘‘குருகுலக் கல்வி'' என்றும் வருணாசிரம சமஸ்கிருதத் திணிப்பு கல்வி முறையைக் கொண்டுவர உள்ளது.

இந்தி சமஸ்கிருதம், இந்தி பேசாத மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் சூழ்ச்சி இதில் அடங்கும்.

தலைக்குமேல் கொலை வாள்!

நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் தலைக்கு மேல் கொலை வாள் சுழன்று கொண்டு இருக்கிறது என்பதை உணரத் தவறினால், அதன் பின் விளைவு தப்பிக்கவே முடியாத பேராபத்தில் கொண்டுபோய் விடும், எச்சரிக்கை!

இனமான பேராசிரியரை சந்தித்தார் கழகத் தலைவர்
தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை நேற்று (18.3.2019) மாலை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மத்திய பி.ஜே.பி. அரசின் பொருளாதார திட்டங் கள் தோல்வி அடைந்ததற்கும், விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்துகொண்டதற்கும், சிறு, நடுத்தரத் தொழில்கள் அழிந்து போனதற்கும், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதற்கும், இவற் றில் கவனம் செலுத்தாததற்கும் காரணமே இவர்களின் சிந்தனை எல்லாம் இந்துத்துவா மதவாத சிந்தனைதான்!

மூன்று வேளை உணவுக்குக்கூட உத்தரவாதம் செய்ய யோக்கியதை இல்லை. ‘‘மாட்டுக் கறி சாப்பிடாதே - பசுவை பாதுகாப்போம் - அதற்காக மனிதர்களைக்கூட கொல்லத் தயார் என்ற பசு பாதுகாப்புப் படையினர்!'' இதெல்லாம் ஓர் அரசு செய்யும் காரியமா?

காரணம் மதவாத சிந்தனையே!

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த எவற்றை செய்யவேண்டுமோ அவற்றைச் செய்யாமல், எதைச் செய்யக்கூடாதோ அதை செய்தே தீருவது என்ற மனப்பான்மைக்குக் காரணம் அவர்களின் மதவெறிப் பாசிசக் கொள்கையும், கோட்பாடும்தான்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களை குறிப்பாக இளைஞர்களை ஒன்றிணைந்த பிரச்சாரத்தின்மூலம் ஏமாற்றி வாக்குகளைப் பறித்து ஆட்சிக்கு வந்தவர் களால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு முட்டுச் சந்தில் நின்று மக்கள்முன், இளை ஞர்கள் முன் மூச்சுத் திணறி நிற்கிறார்கள். அதன் விளைவுதான் அண்மையில் நடந்த அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள்.

யாரை ஏமாற்றிட?

இப்பொழுது அவசரமாக ஆட்சி முடியப் போகும் இந்தக் காலகட்டத்தில் 30 நாட்களுக்குள் 155 திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்றால், அதன் பொருள் என்ன? மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, வாக்குகள் என்ற கழுத்துச் சங்கிலியை அறுக்கலாம் என்பதுதானே! ஏமாற்று வித்தைகள்!!

ஊழலற்ற ஆட்சி எங்களுடையது என்று உரத்த குரலில் பேசியது எல்லாம், ‘ரபேல்' கஜா புயலால் தரைமட்டமாகி விட்டது.

பி.ஜே.பி. தலைமையில் அமைந்த கூட்டணியையும், கட்சிகளையும் ஒரு பக்கம் நிறுத்துங்கள்; காங்கிரஸ் தலைமையில் அமைந்த கட்சிகளையும் இன்னொரு பக்கம் நிறுத்திப் பாருங்கள்.

எது மக்கள் நலன் அணி - எது மக்கள் விரோத அணி என்பது எளிதில் விளங்குமே!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று எதிர்க் கட்சிகளை உடைப்பது - அந்தக் கட்சிகளில் உள்ள அதிருப்திப் பிரமுகர்களை அடையாளம் கண்டு உரிய ‘விலை' கொடுத்து இழுத்துக் கொள்வது - ஆசை காட்டுவது - ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜாதிக் குழுக்கள், பிரமுகர்களைத் தம் வலைக்குக் கொண்டு வருவது - மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது - என்பது போன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோத மான பாசிசப் புத்தியுடன், குணத்துடன் செயல்படுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது. பிளவு ஏற்படுத்திக் குளிர் காய்வது என்பது அவர்கள் கடைப்பிடிக்கும் பாசிசத்தின் பாலபாடம்.

பாசிச மதவத பேராபத்தை வீழ்த்தவேண்டிய இந்தக் காலகட்டத்தில், அகில இந்திய அளவில் சில கட்சிகள், சில தலைவர்கள் ஏதோ தப்புக் கணக்குப் போட்டு, சுயநல நோக்குடன் காங்கிரசு தலைமையிலான அணியோடு கைகோர்க்காமல், மாநிலங்களுக்குள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் கொள்பவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கநேரிடும்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி

நேர்த்தியானது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் அமைந்த தேர்தல் கூட்டணி நேர்த்தியானது - கொள்கை ஒற்றுமையை இங்குக் காண முடிகிறது.

தி.மு.க., காங்கிரசு, இடதுசாரிகள், சிறுபான்மையினரின் கூட்டு என்பது நியாயப்பூர்வமானது. முசுலிம் லீக் மதவாத கட்சியில்லையா என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினர், தங்களின் சமுகநீதி உரி மைக்காக  கூட்டணியில் சேர்ந்துள்ளார்களே தவிர, முஸ் லிம் ராஜ்ஜியம் அமைப்போம் என்ற பொருளில் அல்ல.

சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்கும் அரசி யலை - அதிகார ஆயுதம் கொண்டு நடத்தும் ஒரு சூழ்நிலையில், சிறுபான்மையினர் தங்கள் நலனை, உரிமையை, பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய கடமை யினைத்தான் அவர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாகர்கோவில் பொதுக்கூட்டம்

நாகர்கோவிலில் கடந்த 13 ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இடதுசாரிகள், முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த தலைவர்கள் ஆற்றிய உரையில் எந்தவித முரண்பாட்டுக்கும் இட மில்லாமல் நேர்த்தியான நேர்முக சிந்தனையோடு - நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கு ஊறு ஏற்படாமல் உரையாற்றினார்கள்! வளர்ச்சித் திட்டங்கள் தயார் இந்த அணியில்!!

தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம்!

தேர்தலில் நிற்காத திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையில், வாக்காளர்களுக்கு வழிகாட்டும் உரையைக் குறைந்த நேரத்தில் ஆற்றியிருக்கிறேன்.

உரைகளை ஒப்பிட்டுப் பாரீர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தேர்தல் பரப் புரையையும், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நரேந்திர மோடியின் உரையில் நாகரிகமற்ற தாக்கு தலும், பொய்யான வாக்குறுதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும்.

அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் உரையில், நாகரிகமும், மாநில உரிமைகளை, உணர்வு களை மதிக்கும் போக்கும், சம்பந்தப்பட்ட மாநில மக்க ளின் பிரச்சினைகளை மய்யப்படுத்தியும் இருப்பதை உணர முடியும்!

வாக்காளர்கள் இதையும் குறிப்பாக மதிப்பீடு செய்யவேண்டும்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவின்போது, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலை நோக்கோடு, அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்று அறிவித்தார். அதனை விமர்சனத்துக்குட்படுத்தினர். அதைப்பற்றிச் சற்றும் கவலைப்படாமல், அந்தக் கூட்ட ணியில் முக்கிய பங்கு வகிக்கும் மிகப்பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் அத்தகைய கருத்தினை முன்வைக்க அவருக்கு தாராள உரிமை உண்டு.

அவர் சொன்னது யதார்த்தமானதும், நடைமுறைக்குச் சாத்தியமானதும்கூட!

ராகுல் காந்தியின் ஜனநாயகப் பண்பு!

அதேநேரத்தில், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தியை நோக்கி செய்தியாளர்கள், உங்கள் கூட்டணி யின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று கேட்டபோது, ஜனநாயகத்தன்மையோடுதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்கள் தேர்வு செய்வார்கள் என்று சொன்னது - எத்தகைய முதிர்ச்சியையும், ஜனநாயகப் பண்பையும் உள்ளடக்கியது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டணியை எந்தவிதப் பிரச்சினைக்கும், மனக் கசப்புக்கும் இடமில்லாமல் சகோ தரத்துவ வாஞ்சையோடு அமைத்த பாங்கு போற்றத் தகுந்ததாகும்.

தி.மு.க. கூட்டணியில்

அங்கம் வகிப்போர் எத்தகையர்?

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்போர் இன் னொரு அணியிடம் கொல்லைப்புறத்திலோ, பின் அறையிலோ பேசியவர்கள் கிடையாது. இது இந்த அணியின் கம்பீரத்துக்கும், அறப்பண்புக்கும் உன்னத எடுத்துக்காட்டாகும்.

தலையங்கம்
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக - செம்மொழி தமிழ் பார்ப்பனர்களின் கொடுங்கரங்களில் சிக்கியது குறித்த தலையங்கம் 2 ஆம் பக்கம் காண்க!

தொடக்கம் முதல் தி.மு.க. அணியில் கொள்கைப் பூர்வமாக நேர்மையான முறையில் அங்கம் வகித்து செயல்பட்டு வந்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட முடியாத சூழ்நிலையில், கொள்கைக் கோட்பாட்டை முன்னிறுத்தி, கட்சியின் செயற்குழுவைக் கூட்டி, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியையே ஆதரிப்பது என்று அக்கட்சி தீர் மானித்த அந்த உயர் பண்பாடும், கொள்கையின்பால் வைத்திருக்கும் அறிவு நாணயத்தின் நேர்த்தியையும் எத்தனைச் சொற்களை அணிப் பூட்டிப் பாராட்டினாலும் தகும்! தகும்!!

தளபதியின் தலைமைப் பண்பு!

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளையெல்லாம் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து, நிலைமைகளை எடுத்துச் சொல்லி, அரவணைத்த அந்த மிகச் சிறந்த தலைமைப் பண்புக்காக  தி.மு.க. தலைவர் தளபதியை பலபடப் பாராட்டுகிறோம்.

பி.ஜே.பி.யின் நிறம் என்ன? அதன் கோட்பாடுகள் என்ன? என்பது உலகறிந்த ஒன்றே! அதோடு அண் ணாவின் பெயரையும், ‘திராவிட' என்ற சித்தாந்த சொல் லுருபையும் பெயரில் வைத்துக்கொண்ட அண்ணா தி.மு.க. - பி.ஜே.பி.யின் தொங்கு சதையாக மாறிய கொடுமைக்கு மன்னிப்பே கிடையாது.

பி.ஜே.பி.யைத் தூக்கி சுமக்கவேண்டிய பாவத்தை நாங்கள் செய்யவேண்டுமா? என்று சொன்னதெல்லாம் என்னாச்சு என்று மக்கள், வாக்காளர்கள் கேட்கமாட் டார்களா?

சமுகநீதிக்குத் துரோகம் இழைக்கலாமா அ.இ.அ.தி.மு.க.?

சமுகநீதிக்காக பிறந்தது திராவிட இயக்கம். ‘நீட்' தேர்வு கூடாது - தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் கதி என்ன? மத்திய பி.ஜே.பி. அரசை வலியுறுத்தி அதற்கான ஒப்புதலைப் பெறக்கூட திராணியில்லாத அ.இ.அ.தி.மு.க. அரசு - பி.ஜே.பி.யின் சமுகநீதிக்கு எதிரான கை அசைப் புக்குத் தோப்புக்கரணம் போடுகிறார்கள் என்றால், இவர்களை மன்னிக்க முடியுமா?

எம்.ஜி.ஆர். தோற்றாரே நினைவிருக்கிறதா?

தேர்தலில் தோல்வியே அறியாத எம்.ஜி.ஆர். சமுகநீதியில் கைவைத்த காரணத்தால், பெருந்தோல் வியைச் சந்தித்ததை மறக்கவேண்டாம் அ.இ.அ.தி.மு.க.

தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருந்துரோகம் இழைத்த அ.இ.அ.தி.மு.க.வை மக்களவைத் தொகுதிகள் அல்லாமல் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வி அடையச் செய்யவேண்டியது - தந்தை பெரியாரின் சமுகநீதி மண்ணின் தலையாய கடமையாகும்.

எதற்கும் விலை போகாதீர்!

அதேபோல, சமுகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் குழிவெட்டும் பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்குத் தமிழ்நாட்டில் - புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் பி.ஜே.பி.யையும், அதன் தொங்கு சதைக் கட்சிகளையும் தோல்வி அடையச் செய்து தமிழ் மண்ணின் நிறத்தை, குணத்தை நிரூபித்துக் காட்டுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தத் தேர்தல் முடிவு அடுத்துவரும் தலைமுறையினரின் மானம் - மரியாதை - உரிமைகளைக் காக்கும் தீர்ப்புபோல.

இதில் ‘மயக்க பிஸ்கட்டுகளைக்' கண்டு ஏமாந்துவிடக் கூடாது. பிறகு இந்தியாவோ, ஜனநாயகமோ, மாநிலங் களோ இருக்காது - இது உறுதி!

பணத்துக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு எதிர் கால வாழ்வைப் ப(லி)றிகொடுக்கவேண்டாம்; ஒவ்வொரு வாக்காளரும் காவலாளியாக இருந்து, வாக்குகளை விலைக்கு வாங்கும் அத்தகைய முயற்சிகளையும் முறி யடிப்பார்களாக!

கரணம் தப்பினால் மரணம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

19.3.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner