எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னையார் நினைவு நாளில் நமது சூளுரை இதுவே!!

அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2019) அவருடைய நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டை யொட்டி வரும் - அவர்களின் இந்த நினைவு நாளில், அன்னையார் நம்மிடம் கொடுத்த அய்யாவின் அறிவுச்சுடரை அடுத்த கட்டத்திற்கு  - அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல சூளுரைப்போம் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

புடம் போட்ட தியாகத்தின் வடிவமாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் எம்மில் கொள்கையாய், லட்சியங்களாய் நிறைந்துவிட்ட எம் அன்னையார் ஈ.வெ.ரா.மணியம்மையாரின் இவ்வாண்டு நினைவு நாள் - கடந்த பல ஆண்டுகளைவிட முக்கியத் துவம் வாய்ந்தது; காரணம், அவர் தம் நூறாவது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, இன்பமும், துன்ப மும் இணைபிரியா வாழ்வின் தொடர் கூறுகள் என்பது போல, நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாக் கொண் டாட்டத்தை ஒட்டியே, இன்று (16.3.2019) அவர்தம் நினைவு நாள்!

இதயம் கனக்கிறது; துன்பம் துளைக்கிறது; அறு பதாம் ஆண்டு நிறைவு மணிவிழாவைக்கூட அன்னையார் முன்னிலையில் நடத்திட வாய்ப்பின்றி, இயற்கையின் கோணல் புத்தி'' பழிவாங்கிவிட்டதே என்ற வேதனையும் நம்மைத் துளைக்கிறது.

நம் இலட்சியப் பயணம் என்பது ஒரு தொடர் ஓட்டம்!

என்றாலும், எது தவிர்க்க இயலாததோ, அதை ஏற்றே தீரவேண்டும்; உலகம் யாருக்காகவும் காத் திருப்பதில்லை; அதிலும் நம் லட்சியப் பயணங்கள் ஒரு தொடர் ஓட்டப் பந்தயம்; தடை தாண்டும் பந்தய மும்கூட!  அதில் வெற்றி நிச்சயம்!!

லட்சோப லட்சம் இருபால் கருப்புடைத் தரித்த தொண்டர்கள் இயக்கத்தில் அணிவகுத்து நிற்கின்றனர்.

"அய்யாவைச் சுடராக்கி ஒளியுடன் நம்மிடம் அறிவுச் சுடராய் தந்தார் அம்மா; ஏந்தினோம்; ஓடிக்கொண்டே இருக்கிறோம். சலிப்போ, சபலமோ இன்றி பணி முடிப்போம்!

வரும் தலைமுறை அதைத் தாங்கிப் பிடிக்க ஆயத்தமாகும்வரை நமது ஓட்டம் நிற்காது; தடைபடாது. வெற்றிகளைக் குவிப்பதற்கான வீர ஓட்டம் அது!''

அந்த உறுதிப்பாடு மேலும் வலுவுள்ளதாகட்டும்; இன்று- நூறாண்டையொட்டிய இந்த நினைவு நாளில்!

"ஈ.வெ.ரா.மணியம்மை பவுண்டேஷன்''

ஈ.வெ.ரா.மணியம்மையார் பவுண்டேஷன் (EVR Maniammai Foundation) என்று கல்வி மற்றும் பொது நலம் பரப்பும் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு,

அதன் சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தச்சன்குறிச்சியில் அன்னை மணியம்மையார் பெயரில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி அமைக்க வாங்கிய இடத்தில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

பொதுமக்களின் நன்கொடை, அதுவும் வருமான வரி விலக்குடன் பெற்று, அது நாளும் வளரும், தொண்டறம் செய்யும் அறக்கட்டளையாக பரிமளிக்கத் தொடங்கிவிட்டது!

அகிலத்திற்கு நாம் அளிக்கும் செய்தி!

அந்தச் சுடர் தான் தந்தை பெரியார் என்பதன் அடுத்த கட்டமும் தாண்டி பல்வேறு பணிகள், குறிப்பாக பாலின வேறுபாடுகளைக் களைந்து, மகளிர் உரிமைகள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் போன்ற பல நல்ல இலக்குகளை அடைய இந்த அறக்கட்டளை ஒரு விண்கலன்போல எட்ட முடியாத உயரத்திலும், ஏற்றமுறப் பறந்து பறந்து பணிபுரியும் என்பதே அன்னையார் நினைவு நாளில் அகிலத்திற்கு நாம் அளிக்கும் செய்தியாகும்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

16.3.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner