எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது!''

நாகபுரி, பிப்.4 குடும்பத்தைக் கவனிக்க முடியாதவரால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராட்டிர மாநிலம், நாகபுரியில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் கடந்த 2.2.2019 அன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவ ருமான நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னைச் சந்தித்த பலரும், பாஜக வுக்காகவும், நாட்டுக்காகவும் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும் புவதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவரை நோக்கி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கின்றனர்? எனக் கேட்டேன். அதற்கு அவர், சொந்தமாக கடை வைத்திருந்ததாகவும், அது நன்றாக செயல்படாததால் மூடி விட்டதாகவும் குறிப்பிட்டார். தனக்கு மனைவியும், குழந்தையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நான், முதலில் உனது குடும்பத்தை கவனி என்றேன். ஏனெனில், தனது குடும்பத்தை யாரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும் நிர்வகிக்க முடி யாது. அதனால், குடும்ப பராமரிப் புக்கும், குழந்தைகளை நன்றாக வளர்க்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, கட்சிக் காகவும், நாட்டுக் காகவும் பணியாற் றலாம் என் றார் நிதின் கட்கரி.

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி அண் மையில் பேசியபோது, வாக்குறுதிகளை செயல்படுத்தாத அரசியல் தலைவர்கள், தேர்தலில் மக்களிடம் அடி வாங்குவர் (மக்களால் தோற்கடிக்கப்படுவர்)எனத் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அக்கட்சியை  சேர்ந்த மூத்த தலைவரான நிதின் கட்கரி இவ்வாறு பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்ததற்கு கட்சித் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என அவர் பேசியதும் கட்சிக்குள் பர பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குடும்பத்தை கவ னிக்க முடியாதவரால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று நிதின் கட்கரி பேசியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner