எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத்தில் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு மூடுவிழா  தமிழ்நாட்டில்1053 பள்ளிகளுக்கு மூடுவிழாவா?

ஜெய்ப்பூர், ஜன.9 ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு வீழ்ந்து அங்கு அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. அசோக் கெலாட் பதவிக்கு வந்த பிறகு பள்ளிக் கல்வித்துறை தொடர்பான விவரங்களைக்கேட்டார்,அப்போதுகடந்த 5 ஆண்டுகளில் 20,000 பள்ளிகள் மூடப் பட்டதாகஅதிர்ச்சிகரமானவிவரத்தை தெரிந்துகொண்டார். அதன் பிறகுமூடப் பட்ட பள்ளிகள்எதுவென்றும், மீண்டும் அதை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை விரைவில் செய்யவேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக துவக்கப்பள்ளித் துறை யினர் டிசம்பர் 27- ஆம் தேதி முதல்வரிடம் அளித்திட்ட அறிக்கையில் 2014-2015 மற்றும் 2017-2018 ஆம் கல்வியாண்டில், 3717 துவக் கப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாகக் கூறி யுள்ளார்கள்.

2013- ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே தலைமையினான அரசு ஆட்சி அமைத்த பின்பு 17,000 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூட உத்தரவிட்ட உடனே அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  அப்போது பள்ளிகள் மூடப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி பெரும் போராட் டங்களை நடத்தியது. இதற்கு சட்டமன் றத்தில் விளக்கமளித்த வசுந்தரா ராஜே நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே மாண வர்கள்குறைவாகஉள்ள பள்ளிகளை மூடிவிட்டு கல்வித்தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளைத் திறப்போம் என்று கூறியுள் ளோம்  என்று கூறினார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 20,000 பள்ளிகள் முக் கியமாக கிராமப்புரம் மற்றும் சிறுநகரங் களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் அதற்குப் பதிலாக எந்த ஒரு புதிய பள்ளிகளும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய காங்கிரஸ் அரசு மூடப்பட்ட பள்ளிகளின் விவரங்களைக் கேட்டு அவற்றை மீண்டும் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் 1053 பள்ளிகளை மூடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழககல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் 22.5.2018 அன்று கூறிய தாகஆங்கிலநாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.  அதில், குழந்தைகள் குறைவாக உள்ள பள்ளிகளை மூடப்போவதாக வதந்திகள் வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் 31.7.2018 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் 1,053 பள்ளிகளை மூடப்போவதாகவும், இந்தப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் அரு கிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner