எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ஓடுகின்றனர்.

-ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்அறிவிப்பை, மத்தியத் தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது. இதன் அடிப் படையில் டிசம்பர் 7-ஆம் தேதி ராஜஸ் தான் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடத்தப்பட்டு, டிசம்பர் 11-ஆம் தேதிமுடிவுகள் அறிவிக் கப்பட உள்ளன. இதனிடையே, வசுந் தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு காரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தோல்வி எப் போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். கருத்துக் கணிப்பு முடிவு களும் அதையே கூறு கின்றன. மொத்தமிருக்கும் 200 இடங்களில் பாஜக-வுக்கு 50 இடங்கள் கூட கிடைக்காது என்பதே கணிப்பாக இருக்கிறது.இதனால், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக-வைச் சேர்ந்த முக்கியத் தலை வர்கள், அடுத்தடுத்து அக் கட்சியை விட்டு ஓடத் துவங்கியுள் ளனர். மத்திய முன்னாள் அமைச்சர் ஜஸ் வந்த்சிங்கின் மகன் மன வேந்தர சிங்-தான் முதன் முதலாக பாஜக-வை விட்டு விலகும் படலத்தை ஆரம்பித்து வைத்தார். காங்கிரஸ் கட் சிக்குத் தாவியும் பாஜக-வுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அடுத்ததாக, மாநில நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சுரேந்திரா கோயல், பாஜகவிலிருந்து விலகினார். அய்ந்து முறை எம்எல்ஏ பதவி வகித்த வரான கோயல், ஜெய்தரன் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவ தாகவும் அறிவித்தார். பாஜக-வின் முன் னாள் பொதுச்செயலாளர் குல்தீப்பும், அதே நாளிலேயே பாஜக-வை விட்டு விலகி, அதிர்ச்சி அளித்தார்.அவரைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் நடையைக் கட்டினார். பாஜகவில் இருந்து செவ்வாய்க்கிழமை யன்றே விலகி விட்டேன். முசுலிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்பது தற்போது பாஜககொள்கையாக உள்ளது. அதைப் பற்றி நாம்என்ன கூறமுடியும்? என்று குறிப்பிட்டுள்ள ஹபிபூர் ரஹ் மான், தொண்டர்களுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான் ராஜஸ்தானின் தாசா தொகுதி எம்.பி.யான ஹரிஷ் சந்திரமீனாவும் பாஜக-விலிருந்து வெளி யேறியுள்ளார். முன்னாள் டிஜிபி-யான இவர், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அடைக்கலமாகியுள்ளார்.

இந்த சம்பவங்கள் பாஜக-வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மேலும், ராஜஸ்தான் மாநில சுகா தாரத்துறை அமைச்சர் காளி பூல்சராப், போக்கு வரத்துத் துறை அமைச்சர் யுனெஸ்கான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜ்பால் சிங் ஷெகாவத் ஆகியோரும் பாஜகவை விட்டு விலகலாம் என்று வெளியாகும் செய்திகள் பாஜக தலை மையை கலக்கமடைய வைத்துள்ளது. தேர்தலின்போது, எதிர்க்கட்சித் தலை வர்கள், ஆளுங்கட்சிக்கு ஓடுவதுதான் வாடிக்கை. ராஜஸ் தானிலோ ஆட்சியிலிருக்கும் கட்சியின் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர், விட் டால் போதும் என்று ஓடும் நிலை நடந்து கொண்டிருக்கிறது.முதல்வர் வசுந்தரா ராஜே மீது மக்களுக்கு இருக் கும் அதிருப்தியால், ஏற்கெனவே பாஜக கண்ணீர் விட்டு வரும் நிலை யில், தற்போது அமைச்சர்கள், எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் வரை பலரும் கட்சியை விட்டு ஓடுவதால், தேர்த லுக்கு முன்னதாகவே தங்களின் கூடா ரம் காலியாகி விடுமோ? என்ற அச்சத் தில் பா.ஜ.க. உறைந்து போயுள்ளது. இதனிடையே, மகாராட்டிரா மாநி லத்தில் அனில் கோடே என்ற துலே சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வும் பதவியிலிருந்து விலகினார். துலே நகராட்சித் தேர்த லுக்காக, குற்றப் பின்னணிகொண்ட நபர்களை எல்லாம், பாஜகதலைமை கட்சியில் சேர்த்து வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பதவியை  விட்டு விலகுவ தாகவும் அனில் கோடே கூறியுள்ளார்.கடந்த மாதம் நாக் பூரின் கடோல் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ்தேஷ்முக் என்பவரும் தனது பதவி விலகி பாஜகவிலிருந்து வெளி யேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner