எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சியில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி  மாநாட்டில் தமிழர் தலைவர்

திருச்சி,அக்.8 ஆர்.எஸ்.எஸ். என்ற ‘செல்’ இந்திய அரசியல் சட்டத்தை அரித்துக் கொண்டிருக்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி விமான நிலையம் அருகில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று (7.10.2018) நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார்.

இம்மாநாட்டிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர்

இதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில்,

‘‘ஆர்.எஸ்.எஸ் என்ற ‘செல்’ இந்திய அரசியல் சட்டத்தை அரித்துக் கொண் டிருக்கிறது.மதசார்பின்மைக்குமோடி ஆட்சியில் இடம் இல்லை. மனுதர்மம் அடிப்படையில் தான் ஆட்சிநடக்கிறது. மனிதநேயம் செத்துப் போய்விட்டது. இட ஒதுக்கீடு, சமூகநீதி, ஜனநாயகம் என்றென்றும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மாநாடு தேவையான நேரத்தில் தேவையான எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

மேலும் அரசியல் கட்சி தலை வர்களும் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

‘‘சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித சுதந்திரம் இதுதான் நமது மூச்சுக்காற்று. மோடி ஆட்சிக்கு வந்தபின் ஆர்.எஸ்.எஸ். சொல்வதைத்தான் செய்து வருகிறார். சிறுபான்மை சமுதாயம் பாதுகாக்கப்படும் என்று கூறிதான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று இந்துக்கள் தவிர மற்ற சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி விட்டது.

காங்கிரசு கட்சியைப் பொறுத்த வரை ஆட்சி முக்கியமல்ல. மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். சிறுபான்மையினர் திட்டமிட்டு நசுக்கப்பட்டு வருகிறார்கள். இதற் கெல்லாம் விடிவுகாலம் பிறக்க இன்னும் 6 மாதமே உள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். வெள்ளையனை எதிர்த்த முதல் சுதந்திர போராட்டம் முடிந்துவிட்டது. பாசிச பாரதீய ஜனதா கட்சியின் அரசை அகற்ற இனி நடப்பது 2 ஆ-வது சுதந்திரப் போராட் டம். அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும்.''இவ்வாறு அவர் பேசினார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற சக்தியாக உள்ள தி.மு.க. தலைமையிலான அரசு அமைய வேண்டும். ஆளுகிற அரசு சிறுபான்மை மக்களை பாதுகாப்பது ஜனநாயக கடமை. ஆனால், அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. தமிழக அடிமை அரசு அதற்கு எடுபிடி வேலை செய்கிறது. எனவே, இரு அரசுகளும் தூக்கி எறியப்பட வேண்டும். வரப்போகிற தேர்தலில் மோடியின் கூட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். அது தெற்கில் இருந்து தொடங்கப்பட வேண்டும்’’ என்றார்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், “இன்னும்6மாதத்தில் தேர்தல் நடக் கவுள்ளது. நாடாளுமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பிலும் குரலை ஒலிக்க செய்திட வேண்டும். நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் மோடி மற்றும் பினாமி அரசான எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் உள்பட பலர் பங் கேற்றுப் பேசினர்.

முசுலிம்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து காவிரிப் படுகை பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கலைஞருக்கு நன்றி செலுத்தும் விதமாக சமூகநீதி குறுந்தகட்டை தமுமுக மாநில செய லாளர் வெளியிட அதனை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான கே.என்.நேரு பெற்றுக் கொண்டார்.

இம்மாநாட்டில் பல்வேறு ஊர்களி லிருந்து வந்த ஏராளமான மனித நேய மக்கள் கட்சியினர், மற்றும் அரசியல் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner