எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவ மய்யம் சிறந்தோங்க வாழ்த்துகள்!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழர் தலைவர் ஆசிரியரை டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் முகம்மது ரேலா வரவேற்கின்றனர் (சென்னை, 12.9.2018)

சென்னையில் உள்ள டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களை நிறுவனராகக் கொண்டு இயங்கும் பாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவோடு, உலகப் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரேலா பெயரில் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மய்யம் புகழ்பெற்ற உலகப் பன்னாட்டு மய்யமாக சிறந்தோங்க வாழ்த்துகளைத் தெரிவித்து   திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

1920 களில் மனித வாழ்வு சராசரியாக 23 அய்க்கூட தாண்ட வில்லை. இப்போதோ, (67 முதல் 70 வயது வரை இந்தியச் சராசரி வயது) உயர்ந்திருக்கிறது!

இதற்குக் காரணம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே!

முன்பு உடலின் உறுப்புகள் முதுமையாலோ, விபத்தாலோ பழுத டைந்தால் ஆயுள் முடிந்துவிடும் - உயிரைக் காப்பாற்ற முடியாது!

ஆனால், இப்போது மருத்துவ சாதனைகள் வியத்தகு வகையில் வளர்ந்துள்ளன.

மருத்துவத்தின் வளர்ச்சி

உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ, அதனை பழுது பார்த்துச் சரிப்படுத்துவது - அதன்மூலம் மனித ஆயுளை நீட்டுவது - கூட்டுவது - சாத்தியமாகி உள்ளது.

மிகவும் பழுதடைந்த உறுப்பினை மாற்றி, மீண்டும் புது வாழ்வு தரும் அளவுக்கு நமது மருத்துவ மாமணிகளின் திறமையும், மருத்துவக் கருவிகளின் தொழில்நுட்பமும் நாளும் வளர்ந்தோங்கி, நோயாளிக்குப் புத்துயிர், புதுவாழ்வு தருவதாக அமைந்துள்ளது!

உலகப் புகழ்பெற்ற டாக்டர் முகம்மது ரேலா

உடல் உறுப்புகளில் மிகவும் சிறிய, ஆனால், முக்கிய உறுப்பு கல்லீரல் (Liver). அதனை அப்படியே மாற்றியும், திருத்தியும் செய்யும் மிகப்பெரிய சிறப்பு மருத்துவராக உலகப் புகழ்பெற்றவர் நமது பேராசிரியர் டாக்டர் ரேலா அவர்களாவார்கள்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சையில் கின்னஸ்' சாதனையாளர் இவர்!

மயிலாடுதுறையில் பிறந்த இவர் ஒரு ஆற்றலின் உறைவிடம்; ஆய்வின் ஊற்று; அகிலமும் பாராட்டும் தனித் திறமையான அறுவை சிகிச்சை செய்வதில், குறிப்பாக கல்லீரல் தொடர்பான உறுப்பு பற்றி பழுத்த அனுபவம் பெற்ற ஒப்பற்ற மருத்துவர்.

முன்பு அவர் பகுதி நாள் (மாதத்தில்) இலண்டன் மருத்துவமனை களுக்குச் சென்று மாற்று அறுவை சிகிச்சை செய்து பலருக்கும் புதுவாழ்வு தருபவர்.

பாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அவர்தம் பணி!

சென்னைக்கு வந்தும், வெளிநாட்டுக்குச் சென்று வரும் இந்த மேதையை, நமது பாரத் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழக நிறுவனர் அன்பு சகோதரர் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் கண்டறிந்து,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (குறள் 517)

என்பதற்கொப்ப, இவரது கல்விக் குழுமத்தின் தலைவராக திருமதி ஜெ.சிறீநிஷா அவர்களைத் தலைவர், நிர்வாக இயக்குநராகக் கொண்டு, ஒரு மாபெரும் மருத்துவ ஆராய்ச்சி மய்யத்தை சகல வசதிகளையும் கொண்ட ஓர் சிறப்பு மருத்துவமனையைக் கட்டி, அதற்கு டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மய்யம் (Dr.Rela Institute & Medical Centre) என்ற பெயரிட்டு, அருமையான ஓர் பன்னாட்டு மருத்துவ மாணவர்கள் - ஆய்வாளர்கள் - கல்வியாளர்களை ஈர்த்து பயிற்சி தரும் பெரும் சாதனையை அவரை அதற்குத் தலைவராக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்!

பன்னாட்டு நிறுவனமாகப் பரிணமிக்கும்!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால், அது சிறப்புடன் விழாக் கோலத்தோடு, தொடங்கி இன்று (12.9.2018) வைக்கப் பட்டது!

அண்மையில் சென்னைக்கு, வெளிநாடுகளிலிருந்து கற்றுச் செல்ல, நோய்த் தீர்த்து திரும்ப  இத்துறையில் ஓர் புகழ் பெற்ற உலக பன்னாட்டு நிறுவனமாக இது  ஓங்கி வளர்ந்து, சமுதாயப் பயனைப் பெருக்குவது நிச்சயம் - வாழ்த்துகள்!

நாமும் நேரில் கண்டு, மருத்துவர் டாக்டர் முகம்மது ரேலா அவர்களையும், இதனை உருவாக்கிய நமது சகோதரர் கல்விப் பெருந்தகை டாக்டர் ஜெகத்ரட்சகன் குழுமத்தினரையும், அன்பு மகள் சிறீநிஷா ஆகியோரையும் நேரில் பாராட்டினோம்! வாழ்த்தினோம்!!

நோய் நாடி நோய் முதல் நாடி - தீர்த்து வைக்கும் இதைவிட பெரிய திருப்பணி - அறிவு ஆய்வுப் பெரும்பணி வேறு ஏது?

எனவே, பாராட்டி மகிழ்கிறோம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner