எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுளை நிழற்படமாகவோ, செல்பி எடுத்தோ என்னிடம் காட்டுங்கள்-நான் பதவி விலகத் தயார்!

மணிலா, ஜூலை 12 பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். கட வுளை எனக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுங்கள் அல்லது கடவுளுடன் செல்பியாவது எடுத்துக்காட் டுங்கள். உடனடியாக நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொண்டு பதவி விலகி விடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

பாலினீஸிய பெருந்தீவுகளை ஒருங்கிணைத்து உருவான நாடு பிலிப்பைன்ஸ். பசிபிக் கடல் தொழில் மற்றும் குறுகியகாலப் பயிர் விவசாயம் என்று தொழில் செய்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களுக்கென்று இயற்கையான பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பரவி இருந்த புத்த மதமும் அங்கு ஒரு மதமாக இருந்தது. இவர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றக் கொள்கை வடிவிலான நம்பிக்கையான ஒன்றாகவே இருந்தது.

காலனி ஆதிக்கம், அய்ரோப்பியர்களின் வருகை தொடர்ந்ததால் கிறித்துவம் மற்றும் இசுலாம் பரவியது. இருப்பினும் அந்த மதங்கள் மற்ற நாடுகளில் ஆழமாக இருக்கும் நிலையில் கடவுள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பான நம்பிக்கைகள் இன்றி ஒரு வாழ்வியல் நெறிகளாகவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதை கடைப்பிடித்து வருகின்றனர்.

மக்கள் ஏற்கும் நாத்திக அதிபர்

அங்கு இருந்த பெரும்பாலான அதிபர்கள் மதச்சார்பற்ற தன்மையையே கடைப்பிடித்து வந்தனர். 2016- ஆம் ஆண்டு பதவியேற்ற தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்ர்டே சமரசமில்லாத பகுத்தறிவுவாதி மற்றும் கடவுள் மறுப்பாளராவார். இவர் வழக் குரைஞராக இருந்து பிறகு அரசியலுக்கு வந்தவர். மேலும் உலக வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஒரே நகரத்தில் (டிகோங்) மேயராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. பிலிப்பைன்ஸ் அரசமைப்புச் சட் டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேயர் தேர்தல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட ஆண்டுகள் மேயராக இருந்தபோதும் அவர் தன்னுடைய மதச்சார்பற்ற கொள்கையை தேர்தல் வெற்றிக்காக விட்டுக் கொடுக்கவில்லை. இவரது கண்டிப்பான பகுத்தறிவுக் கொள்கை காரணமாக இவர் மேலை நாடுகள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும்  பிலிப்பைன்ஸ் மக்கள் இவரைப் பெரிதும் விரும்பிய காரணத்தால் அரசியல் குழப்பம் ஏற்படுத்த வழியின்றி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.

இவர் மூடநம்பிக்கை மற்றும் மதம் சார்ந்த கொடுந்துன்புறுத்தல், செயல்பாடுகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை உடையவர். இப்படிப் பட்ட தன்மையை சூன்ய சகிப்பு'' என்று கூறுவர். ஒரு நாட்டுத் தலைவருக்கு இக்கொள்கைகள் இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இவர் மேயர் ஆவதற்கு முன்பு டிகோங் நகரம் பிலிப்பைன்ஸ் கொலைகளின் நகரம்'' என்று அழைக்கப்பட்டது. இவர் மேயர் ஆன பிறகு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் அமைதியான நகரம்'' என்ற புகழ்நிலையை எட்டியது.

இவரை பிலிப்பைன்ஸ் அதிபராக போட்டியிட இவர் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ் புரட்சிகர குடியரசுக் கட்சி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தனது தனது மதச்சார்பற்ற கொள்கைக்கு அதிபர் பதவி சரிப் பட்டு வராது, மக்களிடம் செல்வதற்காக என்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறி மறுத்துவிட்டார். இருப்பினும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 21.11.2015 அதிபர் பதவிக்கு போட்டியிட இவரது பெயர் முன்மொழியப்பட்டது. பிறகு 2016 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு பிலிப்பைன்ஸ் அதிபரானார்.

இவர் அதிபர் ஆகும் முன்பும், அதிபர் ஆகிய பிறகும் இவரது பல்வேறு கருத்துகளால் உலக அளவில் பிரபலமாகி இருந்தார். முக்கியமாக போராளிக் குழுக்களுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்தி, நீங்களாக மக்களின் பாதைக்கு திரும்பி விடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போராளிக்குழுக்கள் அவரதுவேண்டுகோளை ஏற்க மறுத்த பிறகு, ராணுவத்தினர் போராளிகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களது பிறப்புறுப்புகளைச் சிதைத்துவிடுங்கள்'' என்று கூறினார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது,

கடவுள் ஒரு முட்டாள்தானே!

கடந்த ஆண்டு பிலிப்பைன்சில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது கிறித்துவ தேவாலயங்கள் பிரார்த் தனை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல், மழையில் இருந்து தப்பிக்க நல்ல வழிவகைகளைச் சொல்லித்தரவேண்டும்'' என்று கூறியிருந்தார். அதிலி ருந்தே கிறித்துவ அமைப்புகள் இவர்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தன. ஜூலை 7 ஆம் தேதி நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் என்னை மத நம்பிக்கையுள்ளவர்கள் கடுமை யாக விமர்சனம் செய்துவருகின்றனர். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. நான் கடவுளை கடுமையாக விமர்சிக்கிறேன். எனது விமர்சனத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் கடவுள் ஒரு முட்டாள்'' என்று குறிப்பிட்டார்.

இவரது இந்த பேச்சிற்கு உலகெங்குமுள்ள பல மதத்தவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து ரோட்ரிகோ மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது, லட்சம் ஆண்டுகள் ஆனாலும் கடவுள் குறித்த எனது கருத்திற்கு நான்  மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்று  திட்டவட்டமாகக் கூறி யுள்ளார். மேலும் ஒரே நாளில் எப்படி கடவுள் என்ப வர் மனிதனைப் படைத்திருப்பார், படிப்பவர்களுக்கும், அதைப் போதனை என்ற பெயரில் பரப்புபவர்களுக்கும் அறிவு வேண்டாமா? என்று கேட்டுள்ளார்.

கிறித்துவ, இசுலாமிய மத நூல்களில் குறிப்பிட்டுள்ள ஆதாம் ஏவாள் குறித்து பேசிய அவர் இப்படி ஒன்றை கடவுள் செய்திருந்தால், அந்தக் கடவுள் என்பவர் முட்டாள் தானே என்று கூறினார். இதற்கு மத அமைப்புகள் ரோட்ரிகோ கடவுளை அவமதித்துவிட்டார் என்று கூறின.  இதனை அடுத்து கத்தோலிக்கச் சபை இவரை பைத்தியக்கார அதிபர் ‘psychopath’ என்று விமர்சித்திருந்தது.

மதம் என்பது மூளையில் ஊறிய முட்டாள்தனமே!

இது குறித்து அவர் கவலைப்படவில்லை. தனது கருத்தைத் தொடர்ந்து கூறினார். தன்னை பைத்தியக்காரன் என்று கத்தோலிக்க சபை கூறிய பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது பாவிகள் யாரென்று நீங்கள் அறிந்துகொண்டீர்கள். உங்களது மதம் உங்களுக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒருவர் உங்களது கொள்கையை விமர்சித்தால், அதை ஏற்காவிட்டால், அவரை மனநோயாளி என்று கூறும் உங்களது மதம் என்பது மூளையில் ஊறிய முட்டாள்வாதம் என்று கூறினார்.

விவாதிக்கத் தயாரா - அதிபரின் சவால்!

மேலும் கடவுள் குறித்து என்னிடம் பொதுமேடையில் வாதிடத் தயாரா என்று பதில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விவாதிக்க கத்தோலிக்க சபை கடந்த திங்களன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அவசர அவசரமாக கூடியது. ஆனால் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து பிஷப் குழுவில் உள்ள ஒரு மதகுரு கூறும்போது,

"அதிபர் போதை மருந்து உட்கொள்பவர் போல் தெரிகிறது. ஆகவே, அவரது கருத்திற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது" என்று கூறினார்.

மேலும் கடவுளை நான் திட்டவேண்டாம் என்று கூறுபவர்கள் கடவுளுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து காண்பிக்கட்டும் அல்லது கடவுள் நான் தான் என்று கூறும் ஏதாவது ஒரு சான்றை என்னிடம் வந்து காட்டட்டும் என்று அதிபர் கூறியிருந்தார்.

சமீபத்தில் அதிபர் அலுவலகம் வெளியிட்ட ஒரு காட்சிப் பதிவில் அதிபர் பேசியதாவது:

கடவுளுக்கும், எனக்கும் எந்த ஒரு பகையுமில்லை. கடவுள் நேரில் வந்தால் நான் அவரை முட்டாள் என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிப்பேன். அப்போது கடவுள் என்னைப் படைத்தார் என்று ஒப்புக்கொள்வேன். உண்மையில் அவர் நேரில் வந்த பிறகு நான் மன்னிப்பு கோரும்போது எனது மன்னிப்பை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்வார். முதலில் அவர் மக்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நல்ல முடிவெடுக்கட்டும் என்று கூறியிருந்தார். இதை அதிபர் மாளிகை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner