எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட்': தவறான 49 தமிழ் வினாக்களுக்காக

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரவேற்கத்தக்க சமூகநீதி ஆணை

மதுரை, ஜூலை 10 நீட்' தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப் பட்ட வழக்கில், தமிழில் நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு  உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய தரவரிசைப் பட்டியலை யும் வெளியிடவேண்டும் என்று ஆணை யில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப்படிப்பிற்கானநீட்'தேர்வு கடந்தமேமாதம்நடைபெற்றது.இதில் தமிழில்வழங்கப்பட்டவினாத்தாளில் மொழிமாற்றம்செய்யப்பட்டதில்49 வினாக்கள்தவறாகஇருந்ததால்,கருணை மதிப்பெண்வழங்கவேண்டும் எனமார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி எம்.பி.ரங்க ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, நீட்' தேர்வு சரியான முறையில் நடந்துள்ளதாக சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (10.7.2018) தீர்ப்பு வழங் கப்பட்டது. தமிழில் நீட்' எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப் புக்கான புதிய தரவரிசை பட்டி யலைவழங்கவேண்டும்எனவும்நீதிபதி கள் உத்தரவிட்டனர். இதனால், சிபிஎஸ் இக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்த வழக்கில் மிக முக்கிய கேள்வி களை ஜூலை 2- ஆம் தேதியில் நடந்த விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேட்டனர்.

நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு இவ்வழக்கினை விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், ''மருத்துப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுதொடங்கிவிட்டது.இந்நிலையில் தடை விதிக்க முடியாது,'' என்றார்.

நீதிபதிகள் உத்தரவு

அறிவியல் பாடங்களில் ஆங்கில வார்த்தைகளுக்குஇணையாகபொருள் கொள்ளும் வகையில் தமிழ் வார்த்தைகளை கண்டறிய சி.பி.எஸ்.இ., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? அவ்வாறு செய்யப்பட்டது எனில் ஆங்கிலத் திற்கு இணையான தமிழ் வார்த்தைகளை தொகுத்து அகராதி உருவாக்கப்பட்டதா?

அவ்வாறு தொகுத்திருந்தால், அது தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர் களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டதா? உடலுறுப்புகள், தாவரங்கள், பொருள்களுக்கானகுறிப்பிட்டஆங்கில வார்த்தைகளை தமிழில் எப்படி கையாள் வது என்பதுபற்றி தமிழ்வழி மாணவர் களுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என கேட்டிருந்தனர். ஜூலை 6 ஆம் தேதி சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால், சிபிஎஸ்இ மேலும் கால அவகாசம் கேட்டிருந்தது, இதனை மறுத்து இன்று மேற்கண்ட சிறப்பான தீர்ப்பை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.

நீட்'பற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது

தமிழர் தலைவர் கருத்து

நீட்' தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் சி.டி.செல் வம், ஏ.பஷீர் அகமது ஆகியோர் அடங் கிய அமர்வு வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழில் நீட்' தேர்வு எழுதிய மாண வர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி யிருந்தனர். நீட்' தேர்வில் தமிழ் வினாத் தாளில் 49 தவறான கேள்விகள் இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கேள்வி ஒன்றுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் அளித்துப் புதிய தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள் ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் பட்ட நீதி இது- கருணை மதிப்பெண்கள் என்பதைவிட நியாயமாக அளிக்கப்பட வேண்டிய மதிப்பெண்களே இவை என் பதுதான் சரியானது.

மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பைப் புறந் தள்ளும் முயற்சியில் சி.பி.எஸ்.இ. ஈடுபடக் கூடாது என்பதே சமூகநீதியாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமும், கருத்துமாகும்.

கி.வீரமணி,

திராவிடர் கழகம் தலைவர்.

சென்னை

10.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner