எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே 15  மோடி பதவி ஏற்றது முதல் விளம்பரங்களுக்காக  ரூ.4343 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக அரசு கடந்த நான் காண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றது. அரசு சார்பில் ஏராளமான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தெரி வித்து வந்தனர். இந்நிலையில், மும்பை யைச் சேர்ந்த அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் மனு  ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் பாஜக அரசு விளம் பரத்துக்காக 2014 ஆம் ஆண்டுமுதல் செய் துள்ள செலவுகள்பற்றிக் கேள்வி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள் ளது.

அதில், பிரதமர் மோடி தலைமையில் 2014 ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி ஆகும்.

இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் ஒன் றாம் தேதிமுதல் 2017 டிசம்பர் 7 வரை), தொலைக்காட்சி,இணையதளம், வானொலி, டிஜிட்டல் சினிமா,

எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊட கங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் ஒன்றாம் தேதிமுதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பகட்டு விளம்பரங்களைக் காட்டியே மக்களை ஏமாற்றி வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கண்டனம்

இதற்கு நடிகையும் காங்கிரசு தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4,343 கோடி செலவு செய்து இருக்கிறார். காமராஜர் ஒவ்வொரு பைசாவையும் ஏழைகளின் கல்விக்காக செலவு செய்தார். மோடி அவரது சொந்த எக்காளத்தால் வீழ்ச்சி அடைவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner