எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பேட்டி

சென்னை,மே11சென்னை பெரியார் திடலில் இராமாயணம், இராமன், இராமராஜ்யம் சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டத்துக்குப்பின்னர் செய்தியாளர் களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: எல்லா இடங்களி லும் போராட்டக்காரர்களை உடனுக்கு டன் கைது செய்துவருகின்ற காவல் துறையினால், எஸ்.வி.சேகரை இவ்வளவு நாளாக கைது செய்ய முடியவில்லை. இதன் காரணம் என்ன? இதற்கு பின்புலம் ஏதாவது இருக்கிறதா?

தமிழர் தலைவர்: அதிலே அரசி னுடைய ஊனக் கண்களுக்குத் தெரிய வில்லை. ஞானக்கண் வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் ஏனென்று கேட்டால், இப்போது மனு தர்ம ராஜ்யம் நடக்கிறது. கோவன் மாதிரி இருப்பவர்கள்தான் உடனே கிடைப்பார்கள். சேகர்கள் கிடைக்க மாட்டார்கள். அதிலிருந்து சேகர்கள் எவ்வளவு வீரமுள்ளவர்கள், சட்டத்தை எவ்வளவு மதிக்கிறவர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு மேலேயும் இருந்தால், சேகர் மட்டுமல்ல, தலைமைச்செயலாளரும் சேர்ந்து விலக வேண்டும் என்கிற போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் வரும். ஏனென்றால், இது வரையிலே அவரைப் பொருத்துதான் பல புகார்கள் வரும் நிலையில்,  எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை' என்று காட்ட வேண்டிய பொறுப்பு தலைமைச் செயலாளருக்கு உண்டு - உறவின்முறையிலே. ஆகவே, அதைச் செய்ய வேண்டும் என்பதை,  நியாயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், நீதிமன்றத்தை நம்பக்கூடியவர்கள் வலியுறுத்துகிறோம். செய்தியாளர்: கருநாடகத்திலே பாஜக ஜெயிக்கப்போவதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. பாஜகதான் ஜெயிக்கப்போகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறாரே? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: நல்ல ஜோஸ்யர்களை அவர்தேடிக்கொண்டிருக்கிறார்.ஏற்கெனவே அவர்கள் ஏராளமான ஆயத்தங்களை செய்திருக்கிறார்கள். போலி வாக்காளர்களையெல்லாம் தயாரித்திருக்கிறார்கள். அந்த போலி நம்பிக்கை இருக்கும். ஆனால், கரு நாடக வாக்காளர்களுக்கு அதனைப் பொய்யாக்கிக் காட்டக்கூடிய தெம்பும், திராணியும் உண்டு. ஏனென்றால், அங்கு பாஜக தோற்பதற்குரிய நியாயங்கள் வேறு எதுவும் தேவையில்லை, மோடி யினுடைய பேச்சே போதும்.

இவ்வாறு பேட்டியில் கூறினார் திரா விடர் கழகத் தலைவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner