எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>>  இசைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு  புஷ்பவனம் குப்புசாமி நிராகரிக்கப்பட்டது ஏன்?

>>  பார்ப்பன அம்மையார் நியமனத்தின் பின்னணி என்ன?

அமெரிக்காவில் உள்ள பார்ப்பன அமைப்பின் தலையீடு!

அதிர வைக்கும் தகவல்கள் - அம்பலப்படுத்தும் புஷ்பவனம் குப்புசாமி!

 

சென்னை, பிப்.17 இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சகல வகைகளிலும் தகுதியிருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் பார்ப்பன அம்மையார் நியமிக்கப் பட்டதன் பின்னணியில் பார்ப்பன சதி இருப்பதை புஷ்பவனம் குப்பு சாமி அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒரு பார்ப்பன அம்மையாரை நிய மிப்பதற்காகவே விண்ணப்ப தேதியை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

விவரம் வருமாறு:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது என்று கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டி யுள்ளார்

இசை மற்றும் கவின் கலை பல் கலைக்கழக துணைவேந்தர் பதவி நிய மனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ள தாக நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடாபாக அவர் கூறுகையில், "பல்கலைக்கழக துணைவேந்தர் பத விக்கான அழைப்பாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி குறித்த காலத்தில் நான் விண்ணப்பித்தி ருந்தேன். விண்ணப்ப காலம் முடி வடையும் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்படி நான் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சட்டத்திற்கு மாறாக தேவையின்றி விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த நேரத் தில் பிரமிளா குருமூர்த்தியை அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்படி அறிவு றுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர் விண்ணப்பிக்கவே அவருக்கு துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோந்தவன் என்பதால் பதவி மறுக்கப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படுவதில்லை என்று குமுறியுள்ளார், இசையில்  டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள புஷ்பவனம் குப்புசாமி.

பிரமிளா குருமூர்த்தி பின்னணியும் பார்ப்பன அரசியலும்!

பிரமிளா குருமூர்த்தி கர்நாடக இசைக்கலைஞர். அவருக்கு துணை வேந்தராக வரும் அளவுக்கு தகுதி கிடையாது என்றாலும், அரசியல் பின்புலமும், பார்ப்பன ஜாதிச் செல் வாக்கும் உள்ளவர். இவரை துணை வேந்தராக நியமித்ததன் பின்னணியில் பார்ப்பன லாபி இருப்பதை  கண்டு ணர முடியும். அமெரிக்காவின் கிளவ் லேண்ட் மாகாணத்தில் இருக்கும் 'கிளவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ்' என்ற கர்நாடக சபாவை சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார்.

இதனால் இவரது பெயரே 'கிளவ் லேண்ட் சுந்தரம்'. தியாராய கீர்த் தனைகள், பஜனைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்நாடக இசை என அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தும் இந்த சுந்தரத்தின் பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்புடையவர்தான் பிரமிளா குருமூர்த்தி. சுதா ரகுநாதன் போன்ற இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்தும் இந்த அமைப்பு கவுரவித் திருக்கிறது. இதே சுதாரகுநாதன் தான் பிரமிளா குருமூர்த்தியை துணைவேந்த ராக்க அரசுக்கு அழுத்தம் கொடுத் திருக்கிறார்.

பிரமிளா குருமூர்த்தி இசைப் பல்கலைக்கழத்திற்கு துணை வேந்தர் ஆனதும் முதன் முதலாக அவர் செய்தது கிளவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ் சபாவின் நிறுவனர் சுந்தரத்துடன், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறார்.  அமெரிக்க மாணவர்களுக்கு நமது பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுத்து அதற்கு பட்டயச் சான்றிதழ் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரமிளா குருமூர்த்தியும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செய்கிறார்கள். பாரம்பரிய இசை என்று குறிப்பிடுகிறார்களே தவிர எது பாரம்பரிய இசை  என்பது குறிப்பிடப் படவில்லை.

இந்த ஒப்பந்தத்திற்காக பல கோடி ரூபாய் கிளவ்லேண்ட் சுந்தரத்திற்கு நமது வரிப்பணத்தில் இருந்து செல் லும். இதற்கு எல்லாம் எந்த வெளிப் படைத் தன்மையும் இல்லை. கர்நா டக இசையின் மூலம் பார்ப்பனீய நம்பிக்கைகளை இசை வடிவத்தில் பிரச்சாரம் செய்து வரும் கிளவ்லேண்ட் சுந்தரம் செய்வது பாரம்பரிய இசையா? நமது வயலோரங்களில் பாடப்படும் இசையை தன் கணீர் குரலால் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்யும் புஷ்பவனம் குப்புசாமி பாடுவது பாரம்பரிய இசையா?

இசைக்கு ஜாதி கிடையாது என்று சில பார்ப்பனர்கள் சொல்வார்கள். ஆனால் இசைக்கு ஜாதி உண்டு என்பது புஷபவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு பிரமிளா குரு மூர்த்தியை பதவிக்குக் கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதியாகிறது.

 

இன்று (14.02.2018) சென்னை தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில், நமது பாரம்பரிய இசையினை அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு மற்றும் அந்நாட்டு மாணவர்களுக்கு இசைக்கல்வி  அளித்து தேர்வு நடத்தி பட்டயச் சான்றிதழ் வழங்கிட தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் கிளவ்லேண்ட் பைரவிபைன் ஆர்ட்ஸ் இடையே, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி மற்றும் கிளவ்லேண்ட் சுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். உடன் கலை பண்பாட்டுத்துறை ஆணையர்

அ. இராமலிங்கம் இ.ஆ.ப. உள்ளார்.

Sabhash!

6.00pm: Inauguration, invocation & lighting kuthuvilakku. presided by Sri cleveland V.V. Sundaram, Sri Y. Prabhu.

(அமெரிக்க இணையதளத்தில் "சபாஷ்" என்று தலைப்பிட்டு வெளியான செய்தி இது)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner