எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு

பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்

திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு!

எல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்!

கோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

கோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோவையில் 8.1.2018 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஜனவரி 5, 6, 7:

உலக நாத்திகர் மாநாடு

வணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ  என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.

அதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

அதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.

அரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள்.  ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.

பிரகடனம் நிறைவேற்றப்பட்டது

முதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.

சிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.

இரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன்  போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.

எனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன்னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.

அதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம் ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்!’’

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’

‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’

சுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.

மக்கள் இயக்கமாக இருக்கிறது

இதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.

எனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.

பிரியா விடைபெற்றனர்

எனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங்கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது. அடுத்தபடியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

2018 இல் திராவிடர் கழகத்தின்

முக்கிய பணிகள்!

இந்த ஆண்டு, இதையே மய்யப்படுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் பல பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

இந்த ஆண்டு திராவிடர் கழகத்தினுடைய பணிகளில் இரு முக்கியமான பணிகள் என்னவென்று சொன்னால், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்று சொல்கின்ற நேரத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், கடைசியாக ஜாதி ஒளிந்திருக்கின்ற இடம், கோவில் கருவறைதான். ஆகவே, அதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று போராடவேண்டும் அதற்குப் சொன்னபொழுது, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இரண்டு சட்டங்களைக் கொண்டு வந்தார்.

உச்சநீதிமன்றம், சில சந்தேகங்களை எழுப்பியவுடன், ஆகமப் பயிற்சிக்காக நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரையை ஏற்று, 206 பேர் ஆகமப் பயிற்சி முடித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இதுவரையில் பணியமர்த்தப்படவில்லை.

ஏனென்று சொன்னால், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த வழக்கு ஏறத்தாழ 9 ஆண்டுகள் நடைபெற்றது. அதற்குப் பிறகு தீர்ப்பும் வந்தது. அதன்படி, தமிழக அரசு கொண்டு வந்த கலைஞர் அரசு கொண்டு வந்த  - அந்த சட்டம் செல்லும்; அதனை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள்.

ஆனால், நாங்கள் தெளிவாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தும்கூட இன்னமும் அதனை செய்யாமல் இருக்கிறார்கள். நமக்குப் பின்னால் வந்த கேரள அரசு - பினராயி விஜயன் அவர்களுடைய தலைமையில் உள்ள அரசு - அங்கே பல கோவில்களில் ஆதிதிராவிடர்கள் உள்பட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறார்கள்.

அதேபோல, திருப்பதி கோவிலிலும், இப்போது நாங்கள் பயிற்சி கொடுத்து நியமிக்கவிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் கருத்தை உருவாக்கி...

எனவேதான், இந்த ஆண்டு திராவிடர் கழகத்தினுடைய பணி தீவிரமாக இரண்டு முனைகளில், மக்கள் கருத்தை உருவாக்கி, போராட்டம் தேவையானால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதற்கு, அனைத்துக் கட்சியினரும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் கிடையாது. ஆகவே, அந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் தமிழக அரசு. அதன்மூலமாக ஜாதி தீண்டாமை ஒழிவதற்கு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலமாக...

அடுத்தபடியாக எங்களுடைய இந்த ஆண்டு திட்டம் - சமூகநீதிக்காகப் போராடி, சமூகநீதி மண் - பெரியார் மண் என்ற அளவில் இருக்கக்கூடிய இந்த மண்ணில், என்ன ஒரு சூழல் ஏற்பட்டது என்றால், அண்மையில் எல்லோரும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலமாகக் கிடைத்தது.

27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களால், உத்தியோகத் துறையில் வழங்கப்பட்டது.

அதேபோல, அர்ஜூன்சிங் அவர்கள் அமைச்சராக இருந்தபொழுது, கல்வித் துறையிலும் வழங்கவேண்டும் என்று  தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், செயல்பாட்டுக்கு வந்தது.

இப்பொழுது வந்திருக்கின்ற ஒரு புள்ளிவிவரம் அதிர்ச்சியூட்டக் கூடிய வகையில் இருக்கிறது. இதுவரையில், 27 சதவிகிதத்தை மத்திய அரசு - அதனுடைய துறைகள் பின்பற்றவில்லை. மாறாக, 12, 13, 14 சதவிகிதத்திற்குமேல் அவர்கள் கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை மிகப்பெரிய அளவிற்கு வஞ்சித்திருக்கிறார்கள்.

எனவேதான், அதை வலியுறுத்தக் கூடிய வகையில், ஒத்தக் கருத்துள்ளவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய ஒரு சமூகநீதி போராட்டத்தை திராவிடர் கழகம் முன்னெடுக்கவிருக்கிறது.

ஒருபக்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதியைக் காப்பது என்பதுபோன்ற அந்த நிலைகளைத் தெளிவாக வலியுறுத்தவேண்டும் என்பதையும் மிக ஆழமாக வலியுறுத்துகிறோம்.

இந்துத்துவாவாதிகளால், பகுத்தறிவாளர்களான - கோவிந்த் பன்சாரே - கல்புர்கி - கவுரி லங்கேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய படங்களை மாநாட்டில் திறந்து, அவர்களுடைய கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஜனநாயகம் என்பது இருக்கிறதே, அது நம்நாட்டு முறை.

எங்கும் ஆதிக்க சர்வாதிகாரம் கூடாது. உண்ணுவதோ, எண்ணுவதோ, உடுத்துவதோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இடம் தரக்கூடாது.

உங்கள் மூலமாக எல்லோருக்கும்

தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி

திராவிடர் கழகம், அரசியல் அமைப்பாக இல்லை என்றாலும்,  இதை எதிர்க்கக்கூடிய அல்லது பிற்போக்குத்தன கொள்கைகளை ஆதரிக்கக்கூடிய அரசுகள் - அது மத்தியில் இருந்தாலும் சரி,  மாநிலத்தில் இருந்தாலும் சரி, அதனையும் எதிர்த்து, மக்கள் மத்தியில் தெளிவான ஒரு திட்டத்தை, பிரச்சாரத்தை செய்யவேண்டும் என்பதையும் பணியாக மேற்கொள்ளவிருக்கிறோம்.

இதுதான் திராவிடர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டு வேலைத் திட்டமாக இருக்கும். அதற்குரிய போராட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆங்காங்கே நடைபெறும். இதுதான் எங்களுடைய திட்டம். இதனை அறிவிப்பதில், உங்கள் மூலமாக எல்லோருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை மாற்றப்படவேண்டும்

செய்தியாளர்: தமிழகப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: தமிழக அரசினுடைய போக்கு, கண்டனத்திற்குரியது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை என்பது, ஏற்கெனவே அவர்கள் சில மாதத்திற்கு முன் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்; அப்பொழுது பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் என்ன பிரச்சினை என்றால், அவர்களுக்கு தரவேண்டிய தொகை என்று, ஏற்கெனவே அரசு ஒப்புக்கொண்ட தொகையை, தொழிலாளர்களுக்குக் கொடுக்கவில்லை. கேட்டால், வருமானம் இல்லை என்று சொல்கிறார்கள்.

இப்படி ஏதாவது ஒரு சமாதானத்தை சொல்லியிருந்தாலும், தொழிற்சங்க அமைப்புகளைப் பொறுத்தவரையில், ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உள்பட, அவர்களுடைய உரிமைகளை வலியுறுத்துகிறார்கள்.

ஜனநாயக முறைப்படி, அந்தத் தொழிலாளர்களை அழைத்துப் பேசவேண்டும். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சொல்லியதைப்போல, முதலமைச்சர், தொழிலாளர்களை அழைத்துப் பேசவேண்டும். ஏனென்றால், முதலமைச்சர் சொன்னால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையூட்டக்கூடியது.

அதைவிட்டுவிட்டு, நீதிமன்றத்திற்குச் செல்வது - நீதிமன்றம் தடை செய்வது என்றால் அது நியாயமானது கிடையாது.

ஒருவர், இருவர் என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லலாம். ஆனால், ஒட்டுமொத்த அனைவரும் மிகப்பெரிய அளவிற்கு எங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பாக்கித் தொகை வரவில்லை என்கிறார்கள். அதோடு தமிழக அரசு  அறிவித்திருக்கின்ற தொகையைவிட, இவர்கள் கொஞ்சம் அதிகமாகக் கேட்கிறார்கள். இது பேச்சுவார்த்தையின்மூலமாக சுமூகமாகத் தீர்க்கப்படவேண்டிய ஒன்று.

எனவே, தமிழக அரசினுடைய அணுகுமுறை என்பது இருக்கிறதே, இது மாற்றப்படவேண்டிய அணுகுமுறை. அது விரும்பத்தக்கதல்ல. இதனால், பொதுமக்கள் எவ்வளவு பெரிய சிக்கலுக்கு, எவ்வளவு பெரிய இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின்மீது மக்களின் கோபம் திரும்பும் என்கிறார்கள். ஆனால், அந்தத் தொழிலாளர்கள் அநியாயமாக கேட்டால், பொதுமக்கள் கோபமடைவார்கள். ஆனால், அவர்களுடைய உரிமையைக் கேட்கிறபோது, அதனை தெளிவுபடுத்தவேண்டியதும், சமரசம் காணவேண்டியதும், உடன்பாடு காணவேண்டியதும் முதலமைச்சருடைய கடமை. ஆனால், அதனைச் செய்ய அவர்கள் தவறியதினால், இன்றைக்கு இரண்டு, மூன்று நாள்களாக, நான் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, வழிநெடுக அரசுப் பேருந்துகள் ஓடக்கூடிய சூழல் இல்லை.

எனவே, தனியார் பேருந்துகள் அதிகளவிற்குக் கட்டணத்தை ஏற்றியிருக்கிறார்கள்; நெரிசல்கள் இருக்கின்றன. ஆகவே, இந்தக் காலகட்டத்தில்  இந்த அணுகுமுறையை அரசு மாற்றவேண்டும்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner