எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, நவ.4 கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மோடி பணமதிப்பிழப்பை திட்டமிட்டு கொண்டு வந்தாரா? என்று வங்கி அதி காரிகள், ஊழியர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தேகத்தை கிளப்பி யுள்ளனர்.

"பணமதிப்பிழப்பு காரணமாக ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்யப்பட்ட தற்கு எவ்வித கட்டணத்தையும் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமின்றி வங்கி களுக்கும் அரசு இது வரை வழங்க வில்லை" என்று இந்திய வங்கி ஊழி யர்கள் கூட்டமைப்பு பொதுச் செய லாளர் பி  ரதீப் பிஸ்வாஸ் தெரிவித் துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "பண மதிப்பிழப்பு அறிவிப்பு கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அறிவிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், இதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடி நோட்டுக்களில் 99 சதவீதம், அதாவது ரூ.15.28 லட்சம் கோடி வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது என்று ரிசர்வ்வங்கி ஆண்டறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

பொய்த்து போய்விட்டது

கறுப்பு பணத்துக்கு எதிரான போராட்டம், தீவிரவாத அமைப்பு களுக்கு நிதியுதவி செய்வதை தடுக் கவும், கள்ள ரூபாய் நோட்டு புழக் கத்தை தடுக்கும் நடவடிக்கை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். ஆனால், தற்போது இவை அனைத்துமே பொய்த்து போய்விட்டது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் தான் அதிகம் பாதிக் கப்பட்டனர்" என்றார்.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில், "பணமதிப்பிழப்பு பிரச்சினையால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதில் 10 பேர் வங்கி ஊழியர்கள் மற் றும் அதிகாரிகளும் அடக்கம். வங்கி ஊழியர்கள் அபரிமிதமான பணியை மேற்கொண்டனர். இதில் சிலருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் பணி மேற்கொண்டதில் 50 சதவீதத்திற்கு மேலான ஊழியர்கள் இன்னும் அதற்கான ஊதியத்தை பெற முடியாத நிலை உள்ளது" என்றார்.

வங்கிகளின் வளர்ச்சி

குறைந்து விட்டது

இச்சங்க பொதுச் செயலாளர் வெங் கடாச்சலம் கூறுகையில், "இந்த ஒட்டு மொத்த செயலும் வங்கி ஊழியர்களின் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. லட்சக்கணக்கான மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வந்த போது அவர் களை எதிர்கொண்டது வங்கி ஊழி யர்களுக்கு மிகப் பெரிய சவாலாகத் தான் அமைந்திருந்தது.

இந்த கூடுதல் சுமை குறித்து வங்கி நிர்வாகங்கள் கண்டு கொள்ளவில்லை. சனி, ஞாயிற்று கிழமைகளில்கூட ஊழி யர்களை பணியாற்ற ரிசர்வ் வங்கிக் வலியுறுத்தியது. அதிகாரிகள், சில எழுத்தர்கள் மாலை நேரங்களில் நீண்ட நேரம் வங்கிக் கிளைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "அதிக அளவிலான ரூபாய்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதால், பணம் கொடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது வங்கிகளின் வருவாயை வெகுவாக பாதித்தது. வங்கிகளின் வளர்ச்சி 2016&17ஆம் ஆண்டில் 5.1 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது.

அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் வங்கிகளின் வளர்ச்சி சராசரியாக 11.72 சதவீதம் வரை இருந்தது. பண பரி மாற்றத்திலேயே கவனம் செலுத்தி வந்ததால் வங்கிகளின் பற்று வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துவிட்டது" என்றார்.

தனியார் வங்கிகளுக்கு மட்டுமே பணம் விநியோகம்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிரான்கோ ராஜேந்திர தேவ் கூறுகையில், "ஆரம்பத்தில் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றோம். ஆனால், வங்கி ஊழியர்களுக்கு இது ஒரு கொடுமையான கனவாக மாறிவிட்டது. வங்கி ஊழியர்கள் தான் புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்க மறுக்கிறார்கள் என்று மக்கள் கருதினர்.

ஆனால், ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்தது. அரசு வங்கிகளுக்கு வழங்கப்பட வில்லை. தொழிலதிபர்கள், தொழிற் சாலை அதிபர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சகத்தில் இருந்து நேர டியாக கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

"தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சேகர் ரெட்டி என்ற ஒப் பந்தக்காரரிடமிருந்து 300 கோடிக்கு மேல் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்தன என்ற விவரம் எங்களிடம் இல்லை" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஒரு சாதாரண ஒப்பந்தக்காரரின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய இந்த பணமதிப்பிழப்பு நட வடிக்கை இந்தியா முழுவதும் உள்ள பெரிய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியிருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner