எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.3 நீட் தேர்வு என்ற பேராலே சமூக அநீதியை நுழைத்த மத்திய அரசையும், அதற்கு துணை போன மாநில அரசையும் கண்டித்தும், நீதி மன்றத்தின் மோசடியை எதிர்த்து 'நீட்' தேர்வால் தமது மருத்துவக் கனவு பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்துதியும் தமிழ்நாடெங்கும் கண்டனப் போராட் டங்கள், சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போ£ராட்டங்கள் என்று அலை அலையாக நடைபெற்ற மையால் தமிழ்மண்ணே போர்க்களமானது.

 

மருத்துவக்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடம் பெற முடியாத வகையில், சமூக நீதிக்கு எதிராக நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வினால் மருத்துவக் கல்வி கிடைக்காத வேதனையில் ஏழை மாணவி அனிதா தற் கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக கொந்தளித்து மாணவர்களும் பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு வகைகளில் கண்டன எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில்...

மாணவி அனிதாவின் உயிரைப் பறித்த 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும் அதற்கு காரண மான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் மயிலாடுதுறையில் 2.9.2017 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகம் வழி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், ஜாதி ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

உருவ பொம்மை எரிப்பு

சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று காலை 10.50 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் தலைமை தாங்கினார். அப்போது மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து முழக்கமிட்டனர். சாலையில் படுத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

முற்றுகையிட முயற்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கு நரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். காவல்துறையினர் அவர்களை தடுத்த தால், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 70-க்கும் மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதே போல், அசோக்நகர் 100 அடி சாலை யிலும் போராட்டம் நடத்தி மோடியின் உருவ பொம் மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்தனர்.

முதல்-அமைச்சர் வீடு

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முன்பு முதியோர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், ஆறு முகம் ஆகியோர் அனிதாவின் படத்தை கையில் ஏந்தியவாறு வந்து நின்றனர். அவர்கள் எடப் பாடி பழனி சாமியை கண்டித்து பேசியதுடன் மண்ணை வாரி தூற்றினார்கள். அவர்கள் 2 பேரையும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

குண்டுக்கட்டாக தூக்கி...

புரட்சிகர இளைஞர் முன்னணியினர், மருத்துவ கவுன்சிலிங் நடந்து வரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதை அறிந்த காவல்துறையினர் மருத்து வமனை முன்பாக தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தினார்கள்.

காலை 11.30 மணிக்கு மருத்துவமனையை நோக்கி முழக்கமிட்டபடி வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் காவல்துறையினரை மீறி அவர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத் தில் ஈடுபட முயற்சித்த 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள்.

சாலை மறியல்

 

 

இந்தப் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடு பட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி சென்றார்கள்.

போடி

 

'நீட்' தேர்வினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவிற்கு வீரவணக்க கூட்டம் போடியில் நடைபெற்ற திராவிடர் கழகம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஅய் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

மெரினா எழுச்சி இயக்கம்

பிற்பகல் 12 மணி அளவில் சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தை ஒட்டியுள்ள பகுதியில் மெரினா எழுச்சி இயக்கம் சார்பில் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிரே பிற்பகல் 12.15 மணி அளவில் அனைத் திந்திய மாணவர் பெரு மன்றம், இளைஞர் பெருமன்றம், மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 25-க் கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட் டதற்காக அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த சமயத்தில் சிலர் மோடியின் உருவ பொம்மையை சாலை யின் நடுவே வைத்து எரித்தனர்.

ரயில் மறியல்

தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப் பினர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.50 மணி அளவில் தாம்பரம்  -  -சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 11 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் மின்சார ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

நளினி சிதம்பரம் வீடு

நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய நளினி சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ளது. அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்தவர்கள் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரில் இருந்து பைகிராப்ட்ஸ் சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.

காவல்துறையினர் தடுப்பை மீறி செல்ல முயன்ற 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் நேற்று மொத்தம் 32 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் என நடைபெற்றன. இதில், 15 ஆர்ப்பாட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்றவை. எனவே, இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மீதமுள்ள 17 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 735 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் - திருவள்ளூர்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜீ.வி.மதியழகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி., முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலை யின் இருபுறமும் நீண்ட தொலைவில் அணி வகுத்து நின்றன.

பூவிருந்தவல்லியை அடுத்த குமணண்சாவடி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத் தைகள் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப் படுத்தினார்கள். மறியல் போராட்டத் தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில்

கடை அடைப்பு

மாணவி அனிதாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு நடத்த அரியலூர் மாவட்ட வணிகர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று (2.9.2017) மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரியலூர் நகரில்  பேருந்து நிலையம், மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, காந்தி மார்க்கெட் தெரு, பெரிய கடை தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் தா.பழூர், மீன்சுருட்டி, செந் துறை, ஆண்டிமடம், திருமானூர், கீழப்பழூர், ஆர்.எஸ்.மாத்தூர், வி.கைகாட்டி, விக்கிரமங் கலம், ஜெயங்கொண்டம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மாவட் டம் முழுவதும் தெருக்கள் வெறிச்சோடி காணப் பட்டன. மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

அனிதாவுக்கு வீரவணக்கம்! வீர வணக்கம்!!
சமூக நீதிக்கு சாவு மணி அடித்த அரசுகளைக்
கண்டித்து தமிழகமே போர்க்களம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner