எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம்மீது கேள்வி எழுப்பினால்

பி.ஜே.பி. அரசுக்கு எதிரானவர்கள் என்று நடவடிக்கை எடுப்பதா?

ஆபத்தான தேசியவாதம் இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது!

இந்திய அரசின் முன்னாள் அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ். அதிகாரிகள் 65 பேர் பிரதமர் மோடிக்குக் கடிதம்

புதுடில்லி, ஜூன் 17 மத்தியில் ஆண்டு கொண் டிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு,- ஆபத்தான தேசிய வாதம் என்ற பெயரில் எதிர்கால இந்தியாவை சீரழிக்கிறது என்று முன்னாள் அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் 65 பேர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதம் வருமாறு:

ஆபத்தான தேசியவாதம் என்னும் போக்கு, அனைத்துத் துறையிலும் உள்ளவர்களின் அரசமைப்புச் சட்டத்தை மீறிய சர்வாதிகாரப் போக்கினால் எதிர்கால இந்தியா குறித்த கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது, அச்ச உணர்வே உங்களுக்கு கடிதம் எழுதத் தூண்டுகிறது என்று முன்னாள் இந்திய அரசு பணியாளர்கள் குழுமத்தினர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளனர்.

அதன் தமிழாக்கம் வருமாறு:

நாங்கள் இந்திய அரசுப் பணியாளர்களாக பல்வேறு காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு குழு என்ற முறையில் எங் களுக்கு எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறோம்.  ஆனால் பக்கச்சார்பின்மை, நடுநிலை, அரசியலமைப்பின் மீது பற்று ஆகியவற்றை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கவலை யளிக்கும் செயல்களே எங்களை எழுதத் தூண் டியது.

தற்போதைய காலகட்டத்தில் இந்திய அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் சகிக்க முடியாத பல நிகழ்வுகளைப் பற்றியதே இந்த கடிதத்தின் முக்கிய நோக்கம்.

ஏன் இப்படி தவறாய் நடக்கிறது? குறிப்பாக இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டு மதவெறுப்பு வளர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாய்த் தோன்றுகிறது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறியைத் தூண்டும் வகையில் வெளிப் படையாக இடுகாட்டிற்கும், சுடுகாட்டிற்கும் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது. வெவ்வேறு மத விழாக்களுக்கு சமமாகத்தான் மின்சாரம் வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. அவை உண்மையுமில்லை. மதச் சிறு பான்மையினரைக் குறி வைத்து இறைச்சிக் கூடங்கள் தடை செய்யப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இத்தகைய சகிப்பின்மை வன்முறைக்கு வித் திடுகிறது. அதிலும் குறிப்பாக மத ரீதியான வெறுப்புகள் மேலோங்கிய பிரதேசத்தில் ஒரு உள்ளூர் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கெதிராக அவர் வீட்டைத் தாக்குவதற்கு தூண்டி விடுகிறார். அந்தக் குடும்பமே அச்சுறுத்தப்படுகிறது.தங்களை சட்டத்தின் காவலர்களாக கருதிக் கொள்கிற  சட்டப்படியான அதிகாரமற்றோரின் நடவடிக் கைகள்பெருகி வருகின்றன.

பசுப் பாதுகாவலர்களால் உயிரிழப்பவர்கள்

மாட்டிறைச்சி இருந்தது என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு அக்லாக் கொல்லப்படுகிறார். ஒரு பெகலுகான், இரண்டு பசுக்களை தன் ஊருக்கு கொண்டு சென்ற போது, தேவையான ஆவணங்களை தன்னிடம் வைத்திருந்தும், நடுத்தெருவில் அடித்தே கொல்லப்படுகிறார்.

ஜம்மு-காஷ்மீரில்நாடோடிகளாககால் நடைவளர்ப்புத்தொழிலில்ஈடுபட்ட வர்கள்ஓரிடத்திலிருந்துமற்றோரிடத்திற்கு செல்லும்போது தாக்கப்படுகிறார்கள். தண்டனைச் சட்டம் பற்றிய கவலையின்றி ‘கோ ரக்ஷக்‘ அமைப்பினர் செயல்படுகிறார்கள். அரசு இயந்திரங்களின் மறைமுகமான ஆதரவோடும் அல்லது தன்முனைப்பான தூண்டுதலோடும் இதைச் செய்வதாய் தெரிகிறது. வன்முறையில் ஈடுபடுவோர் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதியும் கொடூரம் நிகழ்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக தங்களைச் சட்டத்தின் பாதுகாவலர்களாகப் பாவிப்பவர்கள் தாங்களே காவலர்களாகவும், நீதிபதிகளாகவும், தண் டனையை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுகிறார்கள். இது சட்டத்தின், நீதி வழங்கு முறையின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது சட்டத்தின் ஆட்சியை யும், அரசியல் சாசனத்தையும் கேள்விக்குள் ளாக்குகிறது.

ரோமியோ எதிர்ப்புப் படை

ஏனெனில் அரசுதான் அதன் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சட்டத்தை நிலைநிறுத்தும் உரிமை படைத்துள்ளது. சட் டத்தைத் தங்கள் கையிலெடுத்துக் கொண்டுள்ள ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள் ஆண், -பெண் இணைந்து வெளியே சென்றால்  காதலனுடன் கைகோர்த்துச் சென்றால் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்து  முஸ்லிம் உறவுகள் அல்லது திருமணத்தை தடுக்கும் மிரட்டல்களே இவை. இத்தகைய இணைகளைத் துன்புறுத்த சட்டத்தில் இடமில்லை. குறிப்பாக தான் மோசமாக நடத்தப்படுவதாக பெண் புகாரளிக்காத பட்சத்தில் இதற்கு சட்டத்தில் இடமேதுமில்லை. அய்தராபாத் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாண வர்களும், ஆசிரியர்களும் தாக்கப்படுகிறார்கள்.

கேள்விக்குறியாகும் சமூக நீதி

சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் ஆகியவை பற்றி கேள்வி எழுப்பினாலே தங்களை சங் கடப்படுத்துவதாக கருதி அரசின் உதவியுடன் நிர்வாகத்தினர் இத்தகைய தாக்குதலைத் தொடுக்கிறார்கள். ஜோத்பூரில் சமூகநீதிகுறித்து ஒரு துறை வல்லுநரின் நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார். ஜோத்பூரில் நடந்தது போலவே வேறு பல இடங்களிலும் நடந் திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கூட விவாதங்களும், உரையாடல்களும் இரத்த நாளம் போன்றவை. அவை நெரிக்கப்படுகின்றன. ஏற்க மறுப்பதும் மாற்றுக்கருத்தும் தேச விரோதமாகவும் தேசத்துரோகமாகவும் கருதப்படுகிறது.

இத்தகைய அணுமுறைகள் கருத்து சுதந்திரம் மற்றும் எண்ணங்களை கருகிப் போகச் செய்துவிடும்.பல புகழ் வாய்ந்த தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், சமூக இயக்கங்கள்மீது சட்டத்தை மீறியதாக வழக்குகள் புனையப்படுகின்றன. மீறல்கள் உண்மையெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் அறிந்தவரை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலை யெடுத்தார்கள், தங்கள் ஆட்சேபணையை தெரிவித்தார்கள் அல்லது அரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின் றார்கள் என்பதற்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள்.

ஊடகவியலாளர்கள் மீது

தொடரும் தாக்குதல்

ஆதிக்க கருத்தியலோடு ஒத்துப்போக மறுக்கிறார்கள் என்பதற்காகவே செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தேடித்தேடி அவமானப்படுத்தப்படுகிற, மிரட்டப்படுகிற, சமூக வலைத் தளங்களில் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிற அருவருக்கத்தக்க போக்கைக் காணமுடிகிறது. இது கருத்துச்சுதந்திரத்தோடு பொருந்திப் போவதுதானா?அடாவடி தேசியவாதம் வளர்ந்து வருகிறது. தேசபக்தன் இல்லையெனில் தேசவிரோதி என்பதாக எல்லாவித விமர்சனங்களும் சுருக்கி விடுகிறது. நீங்கள் அரசாங்கத்தோடு இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது. அதிகாரத்தில் உள்ளோரை கேள்வி கேட்கக்கூடாது; அதுதான் வெளிப்படையான செய்தி!

பெரும்பான்மைவாதமும், எதேச்சாதிகாரமும் வளர்ந்து வரும் நிலையில், அது விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் மறுக்கிறது. பொது அதிகாரத்தில் உள்ளோர், பொதுநிறுவனங்கள், அரசியலமைப்பு நிறுவனங்கள் அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால். கவலையளித்திடும் இந்த போக்குகளைப் புறந்தள்ளாதீர்கள், அதை தட்டிக் கேளுங்கள், நமது நாட்டை உருவாக்கிய தலைவர்களின் நோக்கத்தைச் சிதறிடித்து விடாதீர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை மீட்டெடுங்கள்; அதை பாதுகாத்திடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம்.

(இந்த கடிதத்தை என்.டி.டி.வி. இந்தியா தவிர வேறு எந்த அச்சு ஊடகம், மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் வெளியிடவில்லை. இதன் முழுமையான விபரம் ‘த வயர்’ என்ற இணையதளத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர் பட்டியலோடு வெளிவந்திருக்கிறது. அதனை ‘விடுதலை’ நாளிதழ் தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது).



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner

Banner