எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தன்னைப் பார்க்க வரும் எவரும் காலில் விழக்கூடாது என்று தி.மு.க.வின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை விடுத்திருப்பது அறிந்து, தாய்க்கழகமாம், திராவிடர் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியுடன், அவரை மிகவும் பாராட்டி மகிழ்கிறது.

‘மானமிகு சுயமரியாதைக்காரர்!’ என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தம்மை குறிப்பிட்டுக் கொள்வார். மானமிகு சுயமரியாதைக்காரராக அந்நிலைக்கு இதன்மூலம் உயர்ந்து, சுயமரியாதை காக்க முன்வந்துள்ளார் நமது தளபதி அவர்கள்!

தமிழ்ப் புத்தாண்டு மலரும் நிலையில் இத்தகைய மனித நேயமும், சுயமரியாதையும் அனைத்து கட்சிகளிலும் பெருகட்டும், வளரட்டும்!

அன்பும், பணிவும் காட்டுவது தவறல்ல; காலில் விழுவது மனித மாண்புக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு என்பதை பெரியார் சீடர்களாகிய நாம் சொல்லி, வழிகாட்டாமல் வேறு எவர் காட்டுவர்?

தி.மு.க. செயல் தலைவரின் செயல் பரிமளிக்கிறது! பளிச் சிடுகிறது!

வாழ்க! வளர்க!!

- கி.வீரமணி

தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை
7.1.2017

குறிப்பு: தொலைப்பேசி வழியாகவும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner