எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொறியியல் கல்விக்கும் நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வாம்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுக்கரடி?

புதுடில்லி டிச. 23 வரும் கல்வியாண்டு (2017--18) முதல் இந்தியா முழுவதும் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்திற்கு உள்ளதைப் போல அனைத்துப் பொறியியல் கல்விகளுக்கும் ஒரேமாதிரியான பொது நுழைவுத்தேர்வை நடத்தும் முடிவை மனித வளத்துறை மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் தலையீட்டால் கல்வி காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் மருத்துவக் கவுன்சிலின் விதிகளை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாற்றியமைத்து மருத்துவக் கல்விக்கென்று நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வை (‘நீட்’) வலிந்து திணித்துவிட்டது, இதற்கு தமிழகம்உள்ளிட்ட பலமாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம் பியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் பொது நுழைவுத்தேர்விற்கு உள்ள எதிர்ப்புகள் கடுமையாக கிளம்பி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நுழைவுத்தேர்விற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளது,

திங்களன்று டில்லி சென்று மோடியைச் சந்தித்துதிரும்பியதமிழகமுதல்வர்ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கொடுத்த கோரிக்கைகளில் முக்கியமானது, தமிழகத்திற்கு பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதே ஆகும். ‘நீட்’ விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து, கல்வியாளர்களிடமிருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டு இருக்கும் நிலையில், மனித வளத்துறை அமைச்சரகம் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது,

மனித வளத்துறை அமைச்சர் அறிவிப்பு

தலைநகர் டில்லியில் மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மருத்துவ கல்விக்காக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது, இதற்கான ஒரு ஆலோசனையை நாங்கள் நடத்தி முடித் துள்ளோம். பல்வேறு மட்டத்தில் இருந்து கருத் துகளை நாங்கள் கேட்டறிந்தோம். இதனை அடுத்து வரும் கல்வியாண்டு 2017--2018 முதல்இந்த முடிவைநடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப் பியுள்ளோம்'' என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது,

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர் “மோடி தலைமையினாலான அரசு எந்த ஒரு துறையிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பேரங்களை ஒழிக்கும் வகையில் மத்திய அரசே பொதுவான நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம்  கல்லூரிகளில் நடக்கும் ஊழல்கள் குறையும். வெளிப்படையான மாணவர் சேர்க்கை மற்றும் தரமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் சேரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி னார்.

மூட்டைப்பூச்சியை ஒழிக்க குடிசையைக் கொளுத்தும் மத்திய அரசு

இது குறித்து அமைச்சரக செயலாளர் மட்டத்தில் உள்ள ஒருவர் கருத்து தெரிவித்த போது ‘‘நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பெரு மளவிலான முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்வந்த வண்ணமுள்ளது. இந்த முறைகேடுகளை ஒழிக்க  மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க பொது நுழைவுத்தேர்வு அவசியம் என்ற கருத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஆகவே இந்த நுழைவுத்தேர்வு அவசியமானது’’என்று தெரி வித்தார்.

ஏழைகளுக்கு எட்டாக்கனி

இந்தியாவில் அரசு அனுமதிபெற்ற 3.300 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இவை அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளன.இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு 16-லட்சம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர். தற்போதைய விதிகளின் படி மாநில அரசுக்கென்று இட ஒதுக்கீட்டின் மூலமும், சில மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலமும், சில மாநிலங்களில் பொது வரையறை மூலமும் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது,

மத்திய அரசு கல்வித்துறை நடத்தும் பொறியியல் கல்வி நுழைவுத்தேர்வில் (யிணிணி) பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 லட்சம் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசு நடத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்கின்றனர்.

இந்த நுழைவுத்தேர்வுகளில் சில நூறு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.  இந்த பொது நுழைவுத்தேர்விற்காக தயார் செய்கிறோம் என்ற பெயரில் பல்வேறு நகரங்களில் சில தனிநபர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நுழைவுத்தேர்வு பயிற்சி நடத்திவருகின்றனர். இன்றுவரை மத்திய அரசு நடத்தும் பொது பொறியியல் கல்வி நுழைவுத்தேர்வு என்பது ஏழைகள் மற்றும் நடுத்தரகுடும்பத்தின் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது

பணக்காரர்களுக்கு மட்டுமே
இனி பொறியியல் கல்வி

மத்திய அரசின் இந்த முடிவுப்படி இனி வரும் காலங்களில் செல்வந்தர்களின் பிள்ளைகள் மட்டுமே பொறியியல் கல்லூரியில் பயிலும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் “மன் கி பாத்’’ என்ற நிகழ்ச்சியில் பேசும்போது ‘‘இளையவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலைக் கற்றுக்கொண்டு அதிலேயே அவர்கள் ஈடுபடவேண்டும். அவர் களுக்குத் தொடர்பில்லாதவற்றை கற்கப் போய் அதனால் ஏற்படும் காலவிரயங்களால் பல இளைஞர்களின் எதிர்காலம் வீணாகிப் போகிறது’’ என்று கூறினார். அதாவது மறைமுகமாக யாரும் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் உயர்கல்வி பயில்வது அவசியமற்றது என்று கூறினார். அதையே மனிதவளத்துறை பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரில் தற்போது நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner