எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.22 பிரதமர் மோடிமீது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்து என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இது குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால், நாட் டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும். அதனால், என்னை பாரதிய ஜனதா கட்சியின் பேசவிடாமல் தடுக்கிறார்கள்’’ என கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சி, “ ராகுல்காந்தியின் பேச்சை எல்லாம் கருத்தில் கொள்வதில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறு வது காங்கிரஸ் கட்சியின் பழக்கம். ராகுல் காந்தி இதுபோல் வேடிக்கையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்’’ எனத் தெரிவித்தது.

பிரச்சாரம்

இந்நிலையில்,உத்தரப்பிரதேசமாநிலத் தில்,பிரதமர்மோடியின்சொந்ததொகுதியான வாரணாசியில் ராகுல்காந்தி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில்ஈடுபட்டார்.அங்கு நடந்த மிகப் பெரிய பேரணியில் ராகுல்காந்திபேசியதாவது-

ரூ.40 கோடி

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் முன், குஜராத் மாநில முதல் அமைச்சராக நீண்ட ஆண்டுகளாக இருந்தார். அப்போது கடந்த 2013 --2014 ஆம் ஆண்டில், முதல்வராக மோடி இருந்த போது, சஹாரா, பிர்லா நிறுவனத்திடம் ரூ. 40 கோடி லஞ்சமாக பெற்றுள்ளார். இதில் குறிப்பாக சஹாரா நிறுவனத்திடம் மட்டும் 9 முறை லஞ்சம் பெற்றுள்ளார்.

ஆவணங்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இடைவெளியில் மோடிக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆ-ம் ஆண்டு சஹாரா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அளித்த லஞ்சம் குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேபோல, பிர்லா குழுமமும் ரூ. 12 கோடி லஞ்சமாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு கொடுத்துள்ளது. தேதிவாரியாக அந்த ஆவணத்தில், 2013,அக்டோபர் 30 ஆம் தேதி ரூ.2.5 கோடி, நவம்பர் 12- ஆம் தேதி ரூ. 5 கோடி, நவம்பர் 27- ஆம் தேதி ரூ.2.5கோடி, நவம்பர் 29- ஆம் தேதி ரூ.5 கோடி மோடிக்கு லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ந்தேதி ரூ. 5 கோடி, 19 ஆம் தேதி ரூ.5 கோடி, 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14- ஆம் தேதி ரூ.5 கோடி, 28ந்தேதி ரூ. 5 கோடி, பிப்ரவரி 22 ஆம் தேதி ரூ. 5 கோடி என மோடிக்கு லஞ்சமாக சஹாரா நிறுவனம் அளித்துள்ளது.

கிரெடிட்கார்டுகள் மூலம்

விதைகளை வாங்க முடியாது

ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப் பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என சர்ஜிகல் ஸ்டிரைக்கை மோடி அறிவிக்கவில்லை. நேர்மையான ஏழைமக்களுக்கு எதிராக இந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்‘கை தொடுத்துள்ளார். ஒரு விவசாயி, காசோலை மற்றும் டெபிட், கிரெடிட்கார்டுகள் மூலம் விதைகளை வாங்க முடியாது. அப்படி இருக்கையில், அவர்களிடம் இருந்து பணத்தை மோடி பறிமுதல் செய்து விட்டார். ஊழலையும், கருப்புபணத்துக்கு எதிராக உண்மையாகவே பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்தால், அதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆதரிக்கும்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம்,ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகியவற்றில் அங்குள்ள அரசுகள் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலத்தை பறித்துக்கொண்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தில் தலித்துக்களை கொலை செய்வதால், அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், எல்லா பணமும் கருப்பு பணம் கிடையாது, அதேசமயம், எல்லா கருப்பு பணமும் ரொக்கமாக இருப்பதில்லை. இதற்கு உதாரணம் தொழிலதிபர் விஜய்மல்லையா தான்.

தனி விசாரணை தேவை

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் ஒரு சதவீத பணக்காரர்களிடம் இருந்து பணத்தை திரும்ப மோடியால் கொண்டு வர முடியாது. ஆனால், ஏழைகள் வங்கியில் பெற்ற கடனை வலுக்கட்டாயமாக வசூலித்து, வாராக் கடனை அடைக்க முடியும்.

சுவிட்சர்லார்ந்து அரசு, அங்குள்ள வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட்செய்த இந்தியர்கள் பட்டியலை அரசிடம் அளித்தபின்னும், பிரதமர் மோடி ஏன், நாடாளுமன்றத்தில் வெளிப் படையாக அறிவிக்கவில்லை?.

மோடியின் லஞ்சம் குறித்து விசாரணை செய்ய சுயமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

வெட்கமாக இல்லையா மோடி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில்,

“சஹாரா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு, வெட்கம் இல்லாமல், கருப்பு பணத்துக்கு எதிரான போர் என்று கூறி, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து மக்களை துன்பப்படுத்தி வருகிறீர்கள்’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “ சஹாரா நிறுவனத்திடம் இருந்து மோடி லஞ்சம் வாங்கினாரா இல்லையா என்று தான் ராகுல் காந்தி கேட்கிறார்?. நாங்கள் வைத்திருக்கும் ஆவணம் வருமானத்துறையினர் அளித்ததாக இருந்தால், மோடியிடம் விசாரணை செய்யப்பட வேண்டும்‘’ எனத் தெரிவித்தார்.

மறுப்பு

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராகுலின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி ஆதாரத்துடன் கூறி யுள்ளதற்கு, ஆதாரத்தோடு பதில் அளிப்பார்களா? எங்கே பார்ப்போம்!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner