FAQ

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. மின்னிதழைப் படிப்பது எப்படி?

விடுதலை முகப்புப் பக்கத்தில் Top menu வரிசையிலேயே e-paper என்று தரப்பட்டுள்ளது. (விடுதலையின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், அதன் Top menu-வில் e-paper என்ற பகுதி இருக்கும்.) விடுதலை முகப்புப் பகுதியின் வலப்புறத்தில், e-paper என்றும் இணைப்பு தரப்பட்டுள்ளது.

2. வாசகர் கருத்துகளை தெரிவிப்பது எப்படி?

ஒவ்வொரு கட்டுரை அல்லது செய்தியின் கீழ்பகுதியிலும், வாசகர் கருத்துகளைத் தெரிவிப்பதற்கென்றே வாசகர் கருத்துப் பகுதி உள்ளது. அதில், பெயர், மின்னஞ்சல் ஆகியவற்றை பதிவு செய்து, அதன் கீழ் உள்ள பெட்டியில் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்துப் பெட்டியின் கீழ் அஃகுப் பெயர் எனப்படும் நீ “captcha” தரப்பட்டிருக்கும். அதிலுள்ள எண்களையும், எழுத்துகளையும் சரியாக நிரப்பி (பதிவு செய்ய என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கருத்து பதிவாகிவிடும்.) விடுதலை இணைய நிருவாகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்கள் கருத்து பிறர் பார்வைக்கு வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடப்படும் வாசகர்களின் புதிய கருத்துகள் முகப்பு பக்கத்திலும் வெளிவரும். இதுதவிர விடுதலை தளம் குறித்த, பொதுவான கருத்துகளை வெளியிட உங்கள் கருத்துகள் எனும் பகுதியில் பதிவு செய்யலாம்.

3. சந்தாக்களைச் செலுத்துவது எப்படி?

விடுதலை இணையம் முற்றிலும் கட்டணமின்றி செயல்படும் தளமாகும். இணையத்தில் உள்ள எந்த பகுதியையும் பார்ப்பதற்கு சந்தா அவசியமில்லை. எனினும் விடுதலை வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலை அச்சிதழைப் பெறுவதற்கான சந்தா செலுத்தும் வாய்ப்பு விடுதலை இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதலையின் Topmenu-வில் உள்ள சந்தா எனும் பொத்தானை அழுத்தினால், அதில் உள்நாடு, வெளிநாடு சந்தாக்களின் தொகையும், அதை செலுத்துவதற்கான ‘Paypal’ இணையத்தின் வாயிலாக சந்தா செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

4. செய்திகளை பகிர்ந்து கொள்வது எப்படி?

நீங்கள் விரும்பும் கட்டுரையை, உங்கள் நண்பருக்கோ அல்லது நீங்கள் தகவல் தெரிவிக்க விரும்பும் நபருக்கோ அனுப்புவது விடுதலை இணைய தளத்தில் எளிதானதாகும். ஒவ்வொரு செய்தி /கட்டுரையின் கீழும் பகிர் (Share)பொத்தான் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவும், Facebook. Twiter போன்ற முக்கிய வலைதளங்களுக்கும் ஒரே சொடுக்கின் மூலம் தகவல்களை பகிர முடியும். இதுதவிர, 100க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்களின் இணைப்பும் தரப்பட்டுள்ளது.

5. வலைக்காட்சியை பார்ப்பது எப்படி?

பெரியார் வலைக்காட்சியை www.periyar.tv அல்லது, webvision.periyar.in போன்ற முகவரிகள் மூலமாக நேரடியாக சென்றடையலாம். விடுதலை முகப்புப் பக்கத்தில் தரப்பட்டுள்ள வலைக்காட்சி இணைப்பைப் பயன்படுத்தியும் ஒலி ஒளிக் காட்சிகளை கண்டு களிக்கலாம்.

6. பெரியார் பண்பலையை கேட்பது எப்படி?

www.periyar.fm இணையத்தின் மூலமும், பெரியார் பண்பலையை நேரடியாக கேட்க முடியும். விடுதலை முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையினைப் பயன்படுத்தியும் கேட்க முடியும்.

7. முந்தைய இதழ்களைப் பார்ப்பது எப்படி?

கேள்வி 1இல் குறிப்பிட்டுள்ளபடி விடுதலை e-paper சென்றடைந்தால் (viduthalai.in/e-paper.html) பகுதிக்குச் சென்ற பிறகு, அப்பக்கத்தில் வலது புறத்தில் முந்தைய இதழ்கள் எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. நாட்காட்டி வடிவில் தரப்பட்டிருக்கும் பகுதியில் உங்களுக்கு வேண்டிய நாளைத் தேர்ந்தெடுத்து முந்தைய இதழ்களைப் படிக்க முடியும்.

8. விடுதலையில் கணக்கு துவங்குவதால் பயன் என்ன?

விடுதலை இணையத்தைப் பார்க்க எவ்வித கட்டணமோ, கட்டுப்பாடோ இல்லை. எனினும், விடுதலைக் கருவிப்பட்டை (Tool Bar) நாள்காட்டி, Screen Savers மற்றும்  வாசகர்கள் பயன்படுத்தத்தக்க பிற பயன்பாட்டு நிரலிகளை(programes) பெறுவதற்கு விடுதலை இணையத்தில் வாசகர்கள் பதிவு செய்வது அவசியமாகும். விடுதலை மின்னிதழைப் பார்ப்பதற்கு விரைவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.

9. குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்து தேடுவது எப்படி?

விடுதலை முகப்புப் பக்கத்தில், தேடு என்று குறிப்பிட்டு, பெட்டி ஒன்று உள்ளது. அதில் குறிப்பிட்ட வார்த்தையை பதிவு செய்து, Enter பொத்தானை அழுத்தினால், அவ்வார்த்தை இடம் பெற்றுள்ள விடுதலை செய்திகள் பட்டியலிடப்படும்.

10. பதிவிறக்கங்கள் செய்வது எப்படி?

எட்டாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ளபடி, விடுதலையில் பதிவு செய்து கொண்ட பயனாளர்களுக்கு, விடுதலையின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் பதிவிறக்குக எனும் பொத்தானின் மீது சுட்டியை (Mouse over) நகர்த்தும்போது, பதிவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ளவற்றின் பட்டியல் தெரியும். அதில் வேண்டியதைப் சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Banner
Banner