Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.24- மக்களவையில் தனி தெலங்கான கோரி தெலுங்கானா எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்ற பணிகளை நடக்க விடாமல் தடுப்பதால் அவர்களை நீக்கம் செய்ய அமைச்சர் பவன்குமார் பன்சால் மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பன்சால் கொண்டு வந்த தீர்மானம் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதை அவைக்கு தலைமை வகித்த சர்தினா உறுதி செய்தார். இதையடுத்து நீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் அவையிலிருந்து வெளியேற்றவும் சர்தினா உத்தரவிட்டார்.

இத்தீர்மானத்திற்கு எதிராகவும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த 8 எம்பிக்களும் 4 நாள்களுக்கு நீக்கம் செய்யயப்பட்டுள்ளதாக மக்களவை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner