Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகம் முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு ஜாதி, மதம், தொழில் உள்பட 23 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன

சென்னை, ஏப்.24-சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியான கணக் கெடுப்பு தமிழகம் முழு வதும் நேற்று தொடங் கியது. சென்னையில் மட்டும் இந்தப்பணி மே ஒன்றாம்தேதி தொடங்குகிறது.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத் தின் மூலமாக சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள் ளது. இந்த கணக் கெடுப்பு மூலம் ஜாதி மற்றும் மதம் வாரியான புள்ளி விவரங்கள் சேக ரிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் அனைத்து கிராமங்களும் கணக் கெடுக்கப்படுகின்றன.

கணக்கெடுப்பு தொடர்பான விவ ரங்கள் எழுத்துப்பூர்வ மாக இல்லாமல் நேர டியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின் றன. கணக்கெடுப்பின் போது, தொழில், கல்வி, மாற்றுத்திறன், மதம், எஸ்.சி., எஸ்.டி. விவரம், பணி, வருமானம், வரு மான ஆதாரம், அசை யும் மற்றும் அசையா சொத்துக்கள், வீட்டு உபயோக பொருள்கள் என 23 விதமான தக வல்கள் சேகரிக்கப்படு கின்றன. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியில், 34,459 கணக்கெடுப் பாளர்கள், 5,743 மேற் பார்வையாளர்கள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடு கிறார்கள். இதற்காக அவர்களுக்கு முன்கூட் டியே பயிற்சி அளிக்கப் பட்டது. ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் குறிப்பிட்ட வட்டாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அவர்கள் ஏற்கெ னவே அரசு மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களாக இருப்பதால் தங்கள் வேலையில் பாதிப்பு ஏற்படாவண்ணம் நேரத்தைஒதுக்கி பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தினமும் 15 முதல் 20 வீடுகளில் கணக்கெடுக்கவும், ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் 15 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது கணக் கெடுப்பாளருடன் பெல் நிறுவனத்தின் சார்பில் டேட்டா எண்ட்ரி ஆப ரேட்டரும் உடன் செல் வார்கள். கணக்கெடுப்பு விவரங்கள் உடனுக் குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.

ஜாதி வாரியான கணக்கெடுப்பு பணியை ஆகஸ்டு மாத இறு திக்குள் முடிக்க ஊரக வளர்ச்சித்துறை திட்ட மிட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கணக் கெடுப்பு பணி தொடங் கப்பட்டுவிட்ட நிலை யில், சென்னையில் மே மாதம் 1ஆம் தேதி இப் பணி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிக்கு மத்திய அர சாங்கம் ரூ.89 கோடி ஒதுக்கி உள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner