Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 24-இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக ராடார் செயற்கைக்கோள் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த செயற்கைக்கோளுக்கு ரிசாட் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. 1,858 கிலோ எடை கொண்ட ரிசாட் 1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி19 ராக்கெட் மூலம் சிறீஹரிகோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 26ஆம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்படு கிறது. இதற்கான, 71 மணி நேரம் கவுன்டவுன் நேற்று காலை 6.47 மணிக்கு தொடங்கியது.

இந்த ரிசாட் 1 செயற்கைகோள் பூமியில் இருந்து 536 கிலோ மீட்டர் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் கடந்த 20ஆம் தேதியே விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் தேதியை இஸ்ரோ மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ரிசாட் 1 செயற்கைக்கோள் வேளாண்மை, நீர்வள நிர்வாகம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இரவு பகல் என எந்த காலநிலையானாலும், மேகம் மூட்டமாக இருந்தாலும், பூமியின் நிலப்பரப்பை துல்லியமாக படம் படித்து அனுப்பும் திறன் கொண்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner