எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.15 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுகளுடன் (விவிபேட்) சரிபார்க்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

5 மாநில சட்டசபை தேர்த லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் பழுதாகின. மேலும், மத்தியப் பிரதேசம், தெலங்கானாவில் பதிவானவாக்குகள்,எண்ணப் பட்ட வாக்குகளின் எண்ணிக் கையுடன் பொருந்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மக்களவைக்கு கடந்த வியாழக்கிழமை முதல்கட்ட தேர்தல் நடந்தது. அப்போது, ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுநடந்ததாகஇம் மாநில முதல்வரும்,தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி னார். இது தொடர்பாக டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து முறையிட்டார். மேலும், ஆந் திராவில் பல தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.இந்நிலையில்,டில் லியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 21 கட்சிகளை சேர்ந்த தலைவர் களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பதி வாகும் வாக்குகளில் 50 சத வீதத்தை ஒப்புகை சீட்டுகளு டன் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner