எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை எழும்பூர் - மதுரை இடையே செல்லும் வகையில் அதிவிரைவு சொகுசு ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்குள்ளேயே ஓடும் இந்த ரயில் வண்டிக்கு தேஜஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது கண்டனத்திற்கு உரியது. இதுவரையில் தமிழ்நாட்டுடன் பிற மாநிலங்களை இணைக்கும் ரயில்களுக்குத்தான் தமிழ் அல் லாத பெயர்கள் சூட்டப்பட்டு வந்தன. தமிழ்நாட்டுக்குள் ஓடும் ரயில்களுக்கு செம்மொழி, சேரன், பாண்டியன், மலைக்கோட்டை, உழவன்என்று தமிழ்ப் பெயர் கள் சூட்டப்படுவதே வழமை. இந்நிலையில், புதிதாக அறி முகப்படுத்தப்பட்டுள்ள ரயிலுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டுவது பா.ஜ.க. பாசிச அரசின் ஒரே மொழி - சமஸ்கிருதம் என்னும் பாசிசப் போக்கை அப்பட்டமாகக் காட்டும் ஒன்றாகும். சுடரொளி'' என்னும் பொருள் கொண்ட தேஜஸ்' என்னும் பெயரை தமிழிலேயே அறிவிக்கவேண்டும்.

சென்னை தாம்பரம் - நாகர் கோவில் அந்தோதயா விரைவு ரயில் - (அந்தோதயா என்றால் எளியவர்களுக்கானது என்று பொருள்) என சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டது. முதலில் இது தாம்பரம் - திருநெல்வேலி என்று இருந்து, பிறகு நாகர்கோவில் வரைவிரிவுபடுத்தப்பட்டது.இந்த ரயிலில் முன்பதிவு வசதி கிடை யாது; அனைத்துப் பெட்டிகளும் பதிவு செய்யப்படாத பெட்டிகளே!

தேஜஸ் - மதுரை - சென்னை விரைவு வண்டி; தேஜஸ் என்றால் ஒளிமிகுந்த, வேகமான என்று பொருள் வரும். சென்னை மற்றும் மதுரைக்கு இடையே 6 மணிநேரத்தில் பயணத்தை முடிக் கும் வகையில் உள்ளது.

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா, சுவதேஷ் தர்சஜ்ன் யோஜனா, சன்சத் ஆதர்ஸ் கிராம் யோஜனா, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, ஜன் அசுத்தி யோஜனா, ஆவாஜ் யோஜனா, கிசான் கிரிசி கீன்சாய் யோஜனா, கிராம் சடக் யோஜனா, கிராம் கவுசல் யோஜனா, ஜனனி சுரக்ஷா யோஜனா, பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் யோஜனா, சுவர்ண ஜெயந்தி கிராம் ரோஜ்கர் யோஜனா, சடக் சுதார் யோஜனா, அந்தோதயா அன்ன யோஜனா போன்றவை தமிழகத்தில் திணிக் கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

முக்கியமாக வட மாவட்டங் களில் பிரதான் மந்திரி அவாஜ் யோஜனா என்ற பெயரில் ஏழை களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி, புதிதாக கட்டிய வீடுகள் அனைத்திலும் மோடி படம் மற்றும் பிரதான் மந்திரி அவாஜ் யோஜனா போன்ற வாசகங்கள் பெரிய அளவில் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அந்த ஒரு மொழி என்பது அவர் களைப் பொறுத்தவரை சமஸ் கிருதம்தான். அதனால்தான் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட அனைத்திலும் சமஸ் கிருதப் பெயர்கள் சூட்டப்படு கின்றன. தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமி ழிலும் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பித்தால், மொழி நக்சலைட்டுகள்'' (துக்ளக்', 15.9.2010) என்று கூறும் கூட்டம் இப்பொழுது மட்டும் வாய்ப் பொத்திக் கிடப்பது ஏன்?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner