எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆய்வில்  தகவல்

புதுடில்லி, அக்.11- வெற்று முழக்கமானது மோடி அரசின் உறுதிமொழி. இந்த ஆண்டில் இந்திய விவசாயிகளின் வரு மானம் அதிகரிக்கப் போவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உறுதியளித்திருந்தது. அதன் நட வடிக்கையாகவே குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்கியதாகவும் மோடி அரசு கூறியது. விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட 50 சதவிகிதம் கூடுதலான அளவில் அவர்களுக்கு விலை கிடைக்கச் செய்வதே பாஜக அரசின் இலக்கு என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை பாஜக அரசு செயல்படுத்தவில்லை. பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்காக சலுகைகளை வாரி வழங்கும் மோடி அரசு, விவசாயி களை கண்டுகொள்வதில்லை என்று விவசாயிகள்மற்றும்விவசாயஇயக் கங்கள்குற்றம்சாட்டுகின்றன.சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முழு வதுமுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடைபயணமாக வந்து மும்பையில் சங்கமித்ததும் உத்தர்கண்ட் மாநில விவசாயிகள் டில்லி நோக்கி பெரும் பேரணியாக வந்ததும் மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் பயனடையக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

விவசாயக்கடன் தள்ளுபடி, பெட் ரோல், டீசல் விலைக்குறைப்பு, விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தற்போதைய மோடி அரசு நிறைவேற்றாமல் வெறும் வாய்ச்சவடால் அடித்து வருவதாக கோபத்துடன் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் இந்திய விவசாயிகளின் வருமானம் உயரப் போவதில்லை என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. குஜராத், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் உற்பத்தி இந்த ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று கிரிசில் எச்சரித்துள்ளது. இந்தப் பருவத்தில் மேற்கூறிய மாநிலங்களில் 20 சதவிகிதம் குறை வானஅளவிலேயேமழைப்பொழிவு இருந்துள்ளது.

இதுகுறித்துகிரிசில் நிறு வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை பருவ பயிர்களுக்கு உகந்த மாநிலங்களான குஜராத், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும், ஆந் திரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ் டிரா, மத்தியப் பிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களிலும் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அதேபோல, சில மாநிலங்களில் நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும், வரும் பருவத்திலும் பயிர் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டில் சோளம், கம்பு ஆகிய பயிர்களின் உற்பத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் குறைவாகவே இருக்கும். மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தியும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பருத்தி உற்பத்தியும் இந்த ஆண்டில் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 52 சதவிகித அளவிலான குடும்பங்கள் விவசாயத்தையே நம்பியுள்ளதாகவும், இந்த ஆண்டில்அவர்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.விவசாயிகளின் வரு மானத்தைஇரட்டிப்பாக்குவோம்என்ற மோடிஅரசின் உறுதிமொழி வெற்று முழக்கமானது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று விவசாய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner