எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகாராட்டிர மாநிலம் மும்பையிலிருந்து ஒரு தகவல் - அதனை அவாளின் தினமலரே' வெளியிட்டுள்ளதுதான் - சிறப்போ, சிறப்பு!

விநாயக சதுர்த்தி பண்டிகையையொட்டி விநாயகர் சிலை களுக்குத் தங்க நகைகள் அணிவிக்கப்படுகின்றனவாம். இந்த நகைகளின் பாதுகாப்புக்காக ரூ.600 கோடிக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

பொம்மைகளுக்கு  இந்தளவு விலை மதிப்புள்ள நகைகள் அணிவிக்கப்பட வேண் டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.

அந்த நகைகளின் பாதுகாப்புக் கருதி 600 கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூரன்ஸ் என்றால், நகைகளைப் பாதுகாக்கும் சக்தி இந்த விநாய கனுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள் கிறார்கள் என்றுதானே பொருள்! (அதாவது கடவுளை மற - மனிதனை நினை!)

இந்த யோக்கியதையில் இந்த விநாயகருக்கு விக்னேஸ்வரர் என்று பெயராம். அதாவது எந்தவித விக்னம் (துன்பம்) இல்லாமல் காப் பாற்றுவாராம் இந்த விக்னேஷ்வர விநாயகப் பெருமான்.

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?'' என்ற பழமொழி நினைவிற்கு வருகிறதல்லவா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner